ஒரு ஆட்டோ டிரைவருக்கு இத்தனை திறமையா? (வீடியோ) - Tamil Tech

Jul 4, 2017

ஒரு ஆட்டோ டிரைவருக்கு இத்தனை திறமையா? (வீடியோ)

ஆட்டோ டிரைவர்ன்னாலே ஏமாத்தி காசு பிடுங்கிறவங்கன்னு ஒரு கெட்டப் பேரு பொதுவா இருக்கும். நல்ல ஆட்டோ டிரைவருங்களும் இருக்கறாங்க. ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான ஆட்டோ டிரைவரை (Auto Driver) இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல.

தன்னோட ஆட்டோல வர்ற கஷ்டமருக்காக, எவ்வளவு கஷ்டப்பட்டு வசதிகளை செஞ்சு கொடுத்திருக்கான்னு நினைச்சா அப்படியே புல்லரிக்குது.

உண்மையிலேயே கிரேட் பர்சன். (Great Person)

படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல. வேலைக்கு போகிற அளவுக்கு படிப்பு பத்தல. வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியல. குடும்ப தொழிலே ஆட்டோ ஓட்டறதுதான்.
auto driver thiramai

அதனால ஆட்டோ ஓட்டறதுக்கு வந்திட்டாரு. அதுக்கு அப்புறம் இவர் கஷ்டமருக்காக செய்த வேலைகள்தான் இந்த கட்டுரைக்கே காரணம். அப்படி என்னதான் பண்ணாருன்னு கேட்கறீங்களா?

ஆட்டோவிலேயே மேகசின் - Magazine, Tablet -டேப்ளட், லேப்டாப் - Laptop, Wifi Net Connection, TV, Swiping Machine ன்னு ஏகப்பட்ட விஷயங்களை கொடுத்திருக்காரு.

இந்த வீடியோவை பாருங்க உங்களுக்கே புரியும்.

இவரைப் பத்தின ஆவணப்படம் எடுத்து வெளியிட்டிருக்காங்க BIG shortfilm.

அந்த வீடியோ கீழே:இவரோட செயல்களைப் பார்த்துட்டு, இவரை SYCon 2017 பேச கூப்பிட்டு மரியாதை கொடுத்திருக்காங்க. அந்த மேடையில் பேசின பேச்சுதான் கீழ நீங்க பார்க்கிற வீடியோ.


செய்யிற தொழிலை பிடிச்ச மாதிரி செய்தா, அதுவே பெரிய விஷயங்கிறாரு. காசு கொடுக்கிற கஷ்டமர்தான் தெய்வங்கிறதை அழுத்தமா சொல்றாரு.

ஆக, இவர் ஒரு நவீன டெக் ஆட்டோ டிரைவர். கூடவே எதிர்காலத்துல ஏர்பஸ் விடணுங்கிற திட்டமும் இருக்குன்னு சொல்றாரு.

இப்படி அப்டேட்டா இருக்கிற ஒரு அதிசய ஆட்டோ டிரைவரை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லேன்னுதான் நினைக்கிறேன்.

Tags: Super Auto Driver, Customer, Money, Technology, Travel, Different Thinking, Tamil Tech Video.

No comments:

Post a Comment

Write Your Comments Here.