சோசியல் மீடியா கணக்குகளை ஒழுங்குபடுத்த உதவும் செயலிகள் ! - Tamil Tech

Jul 3, 2017

சோசியல் மீடியா கணக்குகளை ஒழுங்குபடுத்த உதவும் செயலிகள் !

கடினமானதை மிக எளிதாக செய்வதற்காக பல அப்ளிகேஷன்கள் நமக்கு கை கொடுக்கின்றன. அந்த வகையில் பேஸ்புக், பின்ட்ரஸ்ட் முதலான சமூக வலைத்தளக் கணக்குகளை சீர் செய்ய உதவுகிறது சில செயலிகள்.

சீர் செய்வது என்றால், பல வேறுபட்ட சமூக இணையதள கணக்குகளை நிர்வகிப்பது சிரமம். அவற்றை ஒரே இடத்தில் இணைத்து கொடுத்து எளிமையாக அவற்றை பயன்படுத்த சில செயலிகள் உதவுகின்றன.

social media managing apps

Hoot Suit - ஹூட் ஷூட்

இதை ஒரு சோசியல் மீடியா மேனேஜர் என்று சொல்லலாம். நாம் பயன்படுத்தும் அனைத்து சோசியல் மீடியா கணக்குகளையும் ஒன்றிணைத்து கொடுக்கிறது. மேலும் இதில் அனாலிடிக் மற்றும் சியோ ஆப்சன்களும் உண்டு.

Social Ohmp- சோசியல் ஓம்ப்

இது ட்விட்டர் கணக்குடன், பின்ரஸ்ட், லிங்க்ட் இன் உட்பட சிலசமூக இணையதள கணக்குகளை இணைக்க உதவுகிறது. ட்வீட்டுகளை ஷெட்யூல் செய்வதற்கும், ப்ரொபைல் தேடுவதற்கான கீவேர்ட் அமைத்தும் கொடுக்கும். ப்ரிமியம் வெர்சனில் கூடுதல் வசதிகள் உண்டு.

Spreadfast - ஸ்பிரீட்பாஸ்ட்

சமூக வலைத்தளங்களில் தேவையான டேட்டாக்களை தொகுத்து வழங்குகிறது இந்த செயலி. பதிவுகள் எத்தனை பேரை சென்றடைந்துள்ளது என்பதை அறிந்துகொள்வதும் இது உதவுகிறது. இதனால் மார்க்கெட்டிங் தரம் உயர வாய்ப்பு ஏற்படும்.

Tailwind - டெய்ல்விண்ட்

இன்ஸ்ட்டா கிராம், பின்ட்ரெஸ்ட் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள நம்முடைய பதிவுகளை வகை வகையாக பிரித்துக்கொடுக்க உதவுகிறது இந்த செயலி. பதிவுகளை ஷெட்யூல் செய்வது, ட்ரெண்டிங் பதிவுகளை பார்ப்பது என உதவிகரமாக இருக்கும்.

Pagemodo - பேஜ்மோடோ

மார்க்கெட்டிங் நபர்கள்,  மேனேஜர் போன்றோரின் பதிவுகளை பெற இந்த செயலி உதவியாக இருக்கும். சமூக வலைத்தளங்களை வியாபார ரீதியாக நோக்குபவர்களுக்கு இந்த செயலி மிக பயனுள்ளதாக இருக்கும்.

Tags: Social Media, Facebook, Pintrest, Linkedin, Instagram, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.