பி.டி.எப் கோப்புகளை பல்வேறு பரிமாணங்களில் மாற்ற உதவும் இணையதளம் - Tamil Tech

Jul 4, 2017

பி.டி.எப் கோப்புகளை பல்வேறு பரிமாணங்களில் மாற்ற உதவும் இணையதளம்

அலுவலக பணி சார்பில் பிடிஎப் கோப்புகள் உருவாக்கி பயன்படுத்துவது தற்பொழுது அதிகரித்து வருகிறது. இணையத்தளங்களில் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய பி.டி.எப் கோப்புகள்  டவுன்லோட் செய்ய கொடுக்கிறார்கள். பி.டி.எப் கோப்புகளை உருவாக்கவும், அதை எடிட் செய்யவும், பார்மட் மாற்றிடவும், வேறு வகையான கோப்புகளாக மாற்றம் செய்திடவும் தேவையான கருவிகளை கொடுக்கிறது ஒரு அற்புதமான, அருமையான இணையதளம்.

powerful and free pdf tools online


கிளவர் பிடிஎப் என்ற அந்த இணையதளத்தில் பி.டி.எப் கோப்பை, வேறு வடிவத்திற்கு மாற்றுவது, எடிட் செய்வது, வேறு கோப்பு வடிவத்திலிருந்து பி.டி.எப் ஆக மாற்றுவது என பல்வேறு வசதிகள் கொடுக்கபட்டுள்ளன.

அதற்கான கருவிகளை பயன்படுத்தி ஒரு கிளிக்கில் இந்த வேலைகளைசெய்து முடித்துவிடலாம்.

பவர்பாய்ண்ட் கோப்புகளை பி.எடி.எப் ஆக மாற்றிக்கொள்ளலாம். பி.டி.எப். வடிவில் உள்ள கோப்பை வோர்ட் கோப்பாக கன்வர்ட் செய்திடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட PDF கோப்புகளை இணைத்துக்கொள்வது, ஒரு கோப்பை பகுதிகளாக பிரித்து சேமிப்பது போன்ற Editing செயல்களையும் செய்ய முடியும்.

ஒரு பிடிஎப் கோப்பில் என்னென்ன செய்ய முடியுமோ, எப்படியெல்லாம் மாற்றம் செய்துகொள்ள முடியுமோ அத்தனைய வசதிகளை கொடுக்கிறது Clever Pdf இணையதளம். அனைத்துமே இலவசம்.

முகவரி: CeleverPDFOnline

Tags: Online PDF Tools, Celever PDF, PDF Making Tools, PDF Editing, Tamil Tech Tools.

No comments:

Post a Comment

Write Your Comments Here.