ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல் கசிந்ததா? உண்மையென்ன? | jio user data leaked - Tamil Tech

Jul 9, 2017

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல் கசிந்ததா? உண்மையென்ன? | jio user data leaked

இந்தியாவெங்கும் ஒரு தகவல் புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ. அட்டகாசமான வசதிகளுடன், அற்புதமான 4G டேட்டாவினை வழங்கி அசத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் வழங்குநராக மாறியது ரிலையன்ஸ் ஜியோ.

இந்நிலையில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.
jio user data leaked

ஜியோ சேவை பயன்படுத்தும் சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளரின் பெயர், இமெயில், சிம்கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, முகவரி போன்ற முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல்கள் உண்மையான இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் உச்சகட்ட தகவல் மீறல் இதுவாகும்.

jio user data leaked


இதனிடையே, இது பற்றி ஜியோ விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவது ஆதரமற்றது எனவும், வாடிக்கையாளர்கள் தகவல்கள் உச்சகட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி சட்டத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Jio was one of the first telecom operators in India to use Aadhaar ID for SIM activation. Users were signed up in a matter of minutes just by verifying their biometric data and their Aadhaar number.

Tags: JIO, User's Data, Leaked, JIO User's Data, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.