விண்டோஸ் ஸ்கிரீனை இரண்டு பகுதிகளாக பிரித்து பயன்படுத்துவது எப்படி? - Tamil Tech

Jul 11, 2017

விண்டோஸ் ஸ்கிரீனை இரண்டு பகுதிகளாக பிரித்து பயன்படுத்துவது எப்படி?

விண்டோஸ் 7 ல் ஸ்கிரீனை இரண்டு பகுதிகளா பிரித்து பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம். இரண்டு விண்டோக்களில் பணிபுரியும்பொழுது, டேப் பயன்படுத்தி, இரண்டு பக்கங்களில் மாறி மாறி பணியாற்ற வேண்டியிருக்கும். TaB பயன்படுத்தாமல் திரையின் இருபுறமும் அவற்றை Side-by-Side கொண்டு வந்து எளிதாக பணியாற்றலாம்.

ஸ்மார்ட் விண்டோ பயன்படுத்தி எப்படி இரண்டு பக்கங்களிலும் விண்டோ கொண்டு வருவது?

பணியாற்ற வேண்டிய விண்டோவின் டைட்டில் பாரில் மௌசை வைத்து டிராக் செய்தால், அந்த விண்டோ ரீசைஸ் செய்வதற்கான பக்க முனைகளை கொண்டிருக்கும். அதை கிளிக் செய்து வேண்டிய அளவுக்கு அந்த விண்டோவினை ரீசைஸ் செய்து வலது அல்லது இடப்புறம் வைத்துக்கொள்ளலாம்.

how do you open windows side by side

அடுத்துள்ள விண்டோவின் டைட்டில் பாரை கிளிக் செய்து டிராக் செய்வதன் மூலம், அதேபோல அதன் எதிர்புறம் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு இரண்டு விண்டோக்களை ஸ்கிரீனில் வைத்து பணியாற்றலாம்.

windows side by side tips

ஸ்மார்ட் விண்டோவைப் பயன்படுத்தி மிக எளிதாக இதைச் செய்யலாம். அதற்கு பணிபுரிய வேண்டிய விண்டோவில் இருக்கும்பொழுது, விண்டோஸ் லோகோ பட்டனை (Start Button) ஹோல்ட் செய்து, இடது அல்லது வலது Aero Mark Key -ஐ அழுத்தினால் அந்த விண்டோவானது ஸ்கிரீனின் சரிபாதியாக வந்து அமர்ந்துகொள்ளும். அடுத்த விண்டோவில் அதே போன்று அதன் எதிர்புறம் அமைவதற்கு செய்துகொள்ளாலாம்.

இந்த முறையில் இரண்டு விண்டோவை திரையில் வைத்துக்கொண்டு பணியாற்றலாம்.

இதிலிருந்து விடுபட்டு மீண்டும் பழைய நிலைக்கு விண்டோஸ் கொண்டுவர இரண்டு மூன்று வழிகள் உள்ளன.

1. ஒரே திரையை மட்டும் பார்க்க வேண்டுமெனில் விண்டோவின் டைட்டில் பாரின் ஏதாவது ஒரு காலி இடத்தில் மௌஸ் பாய்ண்ட்ரை வைத்து அழுத்திக்கொண்டு Shake செய்தால், மற்ற திரைகள் மினிமைஸ் ஆகிவிடும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அதே செயலை செய்தால், மற்ற திரைகள் அனைத்தும் தோன்றும்.

2. விண்டோவை மீண்டும் மேக்சிமைஸ் செய்ய, டைட்டில் பாரில் மௌசை வைத்து அழுத்தியபடி மேல் நோக்கி டிராக் செய்து கொண்டு போனால், ஸ்கிரீன் டாப்பை டச் செய்யும்பொழுது, தானாகவே மேக்சிமைஸ் ஆகிவிடும். அல்லது, டைட்டில் பாரை டபுள் கிளிக் செய்யும்பொழுது, அந்த விண்டோ திரை முழுவதும் விரிந்துவிடும்.

3. விண்டோஸ் கீயை (Start Button) அழுத்திக்கொண்டே, டவுன் அல்லது அப் ஏரோவை அழுத்தி, மினிமை- மேக்சிமைஸ் செய்திடலாம். மேக்சிமைஸ் செய்திட Up Areo Key பயன்படுத்திட வேண்டும். மினிமைஸ் செய்திட டவுன் ஏரோ பயன்படுத்த வேண்டும்.

Tags: Computer Tips, Windows Split Tips, Windows 7, Smart Window, Title Bar, Mouse, Maximize, Minimize.

No comments:

Post a Comment

Write Your Comments Here.