கம்ப்யூட்டர் கிளீனிங் செய்வது எப்படி? - Tamil Tech

Jul 10, 2017

கம்ப்யூட்டர் கிளீனிங் செய்வது எப்படி?

கம்ப்யூட்டர் கிளீனிங் | Computer Cleaning

கம்ப்யூட்டரை ஏன் கிளீன் செய்யணும்? இந்த கேள்விக்கு பதில் கீழே இருக்கும் இந்த படம் பதில் சொல்லும்.

இப்படி ஏகப்பட்ட குப்பைகள் அடைத்துக் கொண்ட கம்ப்யூட்டர் ஒழுங்காக இயங்க முடியுமா?

கண்டிப்பாக முடியாது அல்லவா? தூசி துகள்களால் அடைபடாமல்  நல்ல காற்றோட்டமான வசதியை கம்ப்யூட்டர் பெற்று இருந்தால் வெப்பம் குறையும். வெப்பம் குறைந்தால் கம்ப்யூட்டர் பாகங்கள் அதிக வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாமல் இயல்பாக இயங்கும்.

computer cleaning and information steps

அழுக்கு மற்றும் தூசிகள் கம்ப்யூட்டருக்குத் தேவையான சரியான காற்றோட்டத்தை தடை செய்கிறது. அது மட்டுமில்லாமல் இதனால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பத்தை வெளியேற்றுவதற்கு பொருத்தப்பட்ட சிறிய காற்றாடிகள் பழுதாகும் வாய்ப்புகள் உருவாகும். காற்றாடிகள் இயங்காவிட்டால், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கேபினுக்குள அதிக வெப்பம் ஏற்பட்டு கம்ப்யூட்டர் விரைவில் பழுதாகிவிடும்.

இதுதான் இயல்பாக நடக்கும் நடைமுறை. அதனால் கண்டிப்பாக கம்ப்யூட்டர் சுத்தம் அவசியம்.


எவ்வெப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் சுத்தம் வேண்டும்?


நீங்கள் பயன்படுத்தும் சுற்றுப்புறச்சூழல், அது அமைந்திருக்கும் இடம் பொறுத்து சுத்தம் செய்யும் நாட்களை தீர்மானிக்கலாம்.

வீட்டில் வைத்து பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்றால் ஆறுமாதம் அல்லச்து பத்து மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது.
சுத்தமான சூழ்நிலையில் ஆபிஸ் என்றால் பத்து மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது.

கன்ட்ஸ்ட்ரக்சன் அல்லது தொழிற்சாலை சூழ்நிலையில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் என்றால், 8 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்திடலாம்.
பள்ளி அலுவலகங்கள் எனில் 8 மாதமொருமுறை சுத்தம் செய்திடலாம்.

அதேபோல, கணினியை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும், சுத்தம் செய்வதற்குரிய கால இடைவெளியை நிர்ணயம் செய்திடலாம்.

ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் கணினி என்றால், பத்து மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது. ஒரே கணினியை பலர் பயன்படுத்திடும்பொழுது, அதற்கான கால அளவு குறையும். மேலும் கணினி பயணர்களின் வயதை பொறுத்தும் கால அளவு நிர்ணயம் செய்திடலாம்.

அதிகமான தூசி, துகல்கள் இருக்கும் பகுதிகள் எனில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக கம்ப்யூட்டரை சுத்தம் செய்திட வேண்டும்.


கம்ப்யூட்டர் கிளீன் செய்வதற்கான பொதுவான குறிப்புகள்:


1. கம்ப்யூட்டர் கிளீன் செய்தற்கு Spray பயன்படுத்த கூடாது. ஒருவேளை தேவைப்படுகிறது எனில், ஒரு துணியின் மீது ஸ்பிரே செய்து, பிறகு துடைத்தெடுக்கலாம்.
2. கம்ப்யூட்டரைச் சுற்றி உள்ள அழுக்குகள், தூசிகள், முடிகள் போன்றவற்றை உறிஞ்ச வாக்யூம் கிளீனர் பயன்படுத்தலாம். ஆனால் கம்ப்யூட்டரினுள் சுத்தம் கண்டிப்பாக வாக்யூம் கிளீனரை பயன்படுத்தக் கூடாது.
3. கம்ப்யூட்டர் அல்லது அதனுடைய பகுதிகளை கிளீன் செய்யவதற்கு முன்பு கண்டிப்பாக கம்ப்யூட்டரை Turn Off செய்திட வேண்டும்.
4. கம்ப்யூட்டர் சுத்தம் செய்யப்பயன்படும் நீர்மங்களை பரிசோதித்த பிறகு பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சில கைகளுக்கு அலர்ஜி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். கம்பயூட்டர் கேபின்களை பழுதாக்கும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே மிகவும் நீரூட்டப்பட்ட கிளீனர்களை பயன்படுத்துவது நல்லது.
5. கிளீனிங் செய்யும்பொழுதுமிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். கம்ப்யூட்டரில் உள்ள குமிழ்கள் அல்லது அதில் இணைக்கப்பட்ட பிளக்குகள் விடுபட வாய்ப்புகள் உள்ளன. எனவே கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
6. காற்றாடிகளை கிளீன் செய்யும்பொழுது, அதன் இறக்கைகளை பிடித்துக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
7. கம்ப்யூட்டர் சுற்றி சாப்பிடுவது, தண்ணீர் போன்ற பானங்களை அருந்துவது கூடாது.
8. கம்ப்யூட்டர் சுற்றி  ஸ்மோக் (புகைப்பிடிப்பது) செய்வது கூடாது.


கம்ப்யூட்டர் சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள்:

கம்ப்யூட்டர் சுத்தம் செய்வதற்குரிய பொருட்கள் கடையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது கம்ப்ய்யூட்டர் மற்றும் அதன் பகுதிப் பொருட்களை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டும் கிளீன் செய்திடலாம்.

துணி-Cloth: காட்டன் துணி கொண்டு கம்ப்யூட்டர் கேபின், மௌஸ், கீபோர்ட் போன்றவற்றை துடைத்து எடுக்கலாம். எக்காரணம் கொண்டும் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் ரேம், மதர்போர்டு போன்ற சர்க்யூட் பாகங்களை துணியால் துடைக்க கூடாது.

தண்ணீர் அல்லது துடைக்க கூடிய ஆல்கஹால்: துணியை ஈரப்படுத்த தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.அல்லது rubbing alcohol பயன்படுத்தி துணியை ஈரப்படுத்தி துடைக்கலாம். மற்ற எந்த கிளீனிங் வாட்டரையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது பிளாஸ்டிக்காலான கம்ப்யூட்டர் பகுதி பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பிருக்கிறது.

போர்ட்டபிள் Vacuum: கம்ப்யூட்டர் சுற்றி உள்ள அழுக்கு, தூசிகள், சிகரெட் சாம்பல், முடி போன்றவற்றை உறிஞ்ச Portable Vacuum பயன்படுத்துவது சிறந்த வழி. ப்ளாக் செருகப்பட்ட மின்சார பெட்டிகளில் வேக்யூம் கிளீனர் பயன்படுத்துவது கூடாது.

காட்டம் ஸ்வாப் -  Cotton swabs : துணி புக முடியாத இடங்களான கீபோர்ட் இடுக்குகள் மற்றும் மற்ற பகுதிகளில் நீர் அல்லது கிளீனிங் வாட்டரால் நனைக்கப்பட்ட காட்டன் ஸ்வாப் பயன்படுத்தி துடைத்து எடுக்கலாம்.

lint-free swabs - ஃபோன் ஸ்வாப் பயன்படுத்தி, எங்கெல்லாம் சுத்தம் செய்ய முடியுமோ அங்கெல்லாம் சுத்தம் செய்திடலாம்.

கேஸ் கிளீனிங் - Case Cleaning: கம்ப்யூட்டர் புதியது போல தோற்றமளிக்க கேஸ்கிளீனிங் அவசியம். அது மட்டுமல்லாமல், ஏர் ப்ளோ சரியாக அமைவதற்கும், கம்ப்யூட்டர் கேசினுள் உள்ள பகுதிப் பொருட்கள் குளுமை அடையவும் கேசில் காற்றுப் புக வைத்திருக்கும் ஜன்னல் போன்ற ஓட்டைகள் உள்ள பகுதிகளை கிளீன் செய்வது அவசியம்.

செயல்முறை - Procedure : கம்ப்யூட்டர் கேபின் பிளாஸ்டிக் ஆக இருந்தால் சற்றே ஈரப்பதம் வாய்ந்த துணியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.அகற்ற முடியாக கறையாக இருப்பின் வீட்டில் பயன்படுத்தும் சோப்பை துணையில் தோய்த்து அதை கொண்டு கறையை நீக்க வேண்டும். கண்டிப்பாக Solvent Cleaners போன்ற கரைத்து பயன்படுத்தக்கூடிய கரைசல்களை பயன்படுத்தக்கூடாது.

Tags: Cleaning, Computer, Case, Solvent Water, Computer Tips, RAM, Mother Board, Computer Cleaning, Information and Steps.

No comments:

Post a Comment

Write Your Comments Here.