புதிய இமோஜிகளை கண்டுபிடிக்க உதவும் செயலி - Tamil Tech

Jul 14, 2017

புதிய இமோஜிகளை கண்டுபிடிக்க உதவும் செயலி

பேஸ்புக், வாட்சப் போன்ற மெசேஜிங் சர்வீஸ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தகவல் அனுப்புகையில் இமோஜி என்ற சித்திர எழுத்துக்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்திருப்பதால் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஸ்மார்ட்போனில் இமோஜிக்களுக்கான எழுத்துக்களை பயன்படுத்தும் வசதி இருப்பினும், அதற்கான செயலிகள் கூட ஒரு சில உண்டு.

அந்த செயலிகளின் மூலம், தேவையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வாசகங்கள், வார்த்தைகளை உள்ளிட்டு இமோஜிகளைப் பெற முடியும்.

simply convert to text to emoji

குறிப்பாக டெக்ஸ்ட் டூ இமோஜி செயலியை குறிப்பிடலாம். இதில் உள்ள சர்ச் பாக்சில் தேவையான வார்த்தையை உள்ளிட்டு தேடினால், அந்த வார்த்தைகளுக்கு பொருத்தமான இமோஜிக்கள் காட்டும்.

அந்த இமோஜிக்கை மெசேஜ் செய்யலாம், ஷேர் செய்யலாம், காப்பி செய்து வேறொரு இடத்தில் பயன்படுத்தலாம்.

இமோஜி பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான செயலி.

டெக்ஸ்ட் டூ இமோஜி செயலியை தரவிறக்கம் செய்ய சுட்டி:

Download Text To Emoji

Tags: Android App, Text to Emoji, Free Android App, Tamil Tech Tips.

No comments:

Post a Comment

Write Your Comments Here.