ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் ! - Tamil Tech

Jul 12, 2017

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ் !

கம்ப்யூட்டரில் விரைவாக பணிபுரிய, திரும்ப திரும்ப செய்யும் வேலைகளை குறைக்க, விரைவாக செயல்பட்டு உற்பத்தி திறனை பெருக்க பயன்படுபவை கீபோர்ட் ஷார்ட் கட்ஸ்.  உதாரணமாக ஒரு டெக்ஸ்ட்டை காப்பி செய்ய வேண்டுமெனில் அந்த டெக்ஸ்டை Highlight செய்த பிறகு, மௌஸ் ரைட் கிளிக் செய்து அதை காப்பி செய்து , பிறகு வேண்டிய இடத்தில் மௌஸ் பாயிண்டரை வைத்து Paste கிளிக் செய்ய வேண்டும்.

அதுவே கீபோர்ட் ஷார்ட் கட் பயன்படுத்தினால் இரண்டு விரல்கள் அழுத்தல்களில் ஒரு நொடிக்குள் அந்த வேலையை செய்துவிடலாம். டெக்ஸ்ட் செலக்ட் செய்த பிறகு, Ctrl + C அழுத்தினால் காப்பி ஆகிவிடும். Ctrl + V அழுத்தினால் பேஸ்ட் ஆகிவிடும்.

இதுபோன்று 10 முக்கியமான கீபோர்ட் ஷார்ட்கட்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டால் கம்ப்யூட்டரில் உங்களது வேலைகளை முடிப்பது மிக சுலபம். எந்த மன அழுத்தமின்றி விரைவாக செய்து முடிக்கலாம்.

top 10 keyboard shortcut keys

Ctrl+C , Ctrl+Insert

இந்த இரண்டு ஷார்ட்கட் விசைகளும் ஹைலைட் செய்யப்பட்ட ஐட்டத்தை காப்பி செய்ய உதவுகின்றன.

தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை கட் செய்ய வேண்டுமென்றால் Ctrl + X.
இந்த கட்டளையானது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களை கட் செய்து, கிளிப் போர்டில் ஸ்டோர் செய்துவிடும். தேவையான இடத்தில் மௌஸ் கர்சர் வைத்து பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

Ctrl+V , Shift+Insert

இந்த இரு ஷார்ட் கட் கட்டளைகள் கிளிப்போர்டில் உள்ள டெக்ஸ்ட்/ஆப்ஜெக்ட் களை பேஸ்ட் செய்திடும்.

ஆப்பிள் கம்ப்யூட்டரில், டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட்டை காப்பி செய்ய Cmd + C, அதை பேஸ்ட் செய்திட Cmd+V கட்டளைகள் பயன்படும்.

Ctrl+Z மற்றும் Ctrl+Y

ஒரு செயலை செய்த பிறகு அதை மீண்டும் பழைய நிலைக்கு Undo கொண்டு வர Ctrl+Z கீபோர்ட் ஷார்ட் பயன்படும். Undo செய்தை மீண்டும் கொண்டு வர Ctrl + Y சுருக்கு விசை பயன்படும்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் எனில், Undo செய்ய Cmd + Y,
Redo செய்ய Cmd + Z.

Ctrl+F

ஃபைண்ட் பீல்ட் கொண்டு வர Ctrl+F பயன்படுகிறது. அதாவது ஒரு இடத்தில் உள்ள டெக்ஸ்ட்டை கண்டுபிடிக்க இந்த கட்டளை பயன்படுகிறது. Ctrl+F அழுத்தவுடன் தோன்றும் பெட்டியில் தேட வேண்டிய வார்த்தை உள்ளிட்டு Find கொடுத்தால், அந்த வார்த்தைகள் உள்ள இடம் ஹைலைட் செய்யப்பட்டு காட்டப்படும்.

உதாரணமாக நீங்கள் ஒரு இணைய பக்கத்தில் இருக்கிறீர்கள் என்றால், அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு வார்த்தையை தேட, இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் கம்ப்யூட்டரில் Cmd + F கட்டளை பயன்படுத்த வேண்டும்.

Alt+Tab அல்லது Ctrl+Tab

ஒரு விண்டோவிலிருந்து மற்றொரு விண்டோவிற்கு மாற இந்த கட்டைகளைகள் உதவும். உதாரணமாக கம்ப்யூட்டரில் ஒரு சில புரோகிராம்களை திறந்து வைத்திருக்கும்போது, ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு முன்னோக்கிச்சென்று மாற இந்த கட்டளைகளை பயன்படுத்தலாம். பிரௌசரில் ஒரு டேப் (Tab) லிருந்து மற்றொரு டேப் க்கு செல்ல Ctrl+ Tab பயன்படும். ஒரு விண்டோவிலிருந்து மற்றொரு விண்டோவிற்கு பின்னோக்கிச் செல்ல Alt+Shift+Tab .


Ctrl+Backspace

ஒரு வார்த்தையை டெலீட் இந்த இந்த கட்டளை கொடுக்கப்படுகிறது. கர்சருக்கும் இருக்கும் இடத்திற்கு முன் இருக்கும் வார்த்தையை அழிக்கும்.

Ctrl+Shift

 Ctrl+Shift விசையை அழுத்திக் கொண்டு, லெப்ட் ஏரோ மார்க் கீயை அழுத்தினால் பின்புறம் உள்ள டெக்ஸ்ட் ஹைலைட் (செலக்ட்) ஆகும்.  தொடர்ந்து ஏரோ மார்க்கை  அழுத்திடும்பொழுது, அடுத்தடுத்த வார்த்தைகள் பின்னோக்கி செலக்ட் (Highlight) ஆகும்.

Ctrl+Shift விசைகளை அழுத்திபடி ரைட் ஏரோ மார்க் கீயை அழுத்த முன் பக்கமுள்ள வார்த்தை செலக்ட் ஆகும்.

Ctrl+Shift விசைகளை அழுத்திபடி,  மேல் நோக்கிய அம்புக்குறி விசையை அழுத்தினால் மேல்நோக்கி உள்ள பத்தி (Para) செலக்ட் ஆகும்.

Ctrl+Shift விசைகளை அழுத்திபடி, கீழ் நோக்கி அம்புக்குறியை அழுத்தினால், கீழுள்ள வரிகள் செலக்ட் ஆகும்.


Ctrl + S

ஒரு டாகுமெண்ட் அல்லது ஏதாவது பைலை சேமிக்க இந்த கட்டளை உதவும். ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த கட்டளையை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பாதியில் பவர் கட் ஆனால் கூட, நீங்கள் கடைசியாக சேமித்த வரை அந்த பைல் உங்களுக்கு கிடைக்கும்.

ஆப்பிள் கம்ப்யூட்டரில் ஃபைல்களை சேமிக்க கட்டளை  Cmd + S.


Ctrl+Home அல்லது Ctrl+End

ஒரு டாகுமெண்ட் அல்லது ஏதேனும் திறந்திருக்கும் டெக்ஸ் எடிட்டர் ஃபைல் அல்லது ஒரு வைப்சைட் பக்கத்தின் தொடக்க பகுதியை கர்சர் அடைய கட்டளை Ctrl + Home. இறுதி பகுதியை அடைவதற்கு Ctrl + End.

Ctrl + P

ஓப்பன் செய்யப்பட்டிருக்கும் ஃபைல் ஒன்றினை பிரிண்ட் செய்ய இந்த கட்டளை பயன்படும்.

ஆப்பிள் கம்ப்யூட்டரில் Cmd + P.

Page Up, Page Down Spacebar

ஒரு பக்க அளவிற்கு  மேல் நோக்கி செல்ல Page Up பட்டன் பயன்படுகிறது . ஒரு பக்க அளவிற்கு (கம்ப்யூட்டர் திரையளவு) கீழ் நோக்கி நகர Page Down பயன்படுகிறது .

பார்த்துக்கொண்டிருக்கும் வெப்சைட் பக்கத்தை கீழ்நோக்கி நகர்த்த Space Bar விசை பயன்படுகிறது. மேல்நோக்கிச் செல்ல Shift + Spacebar. இணையதள பக்கங்களை மேல்/கீழ்நோக்க நகர்த்த Page up, Page Down விசைகளும் பயன்படும்.

Tags: Computer tips, Windows Tips, Shortcuts, Windows Shortcut Keys, Keyboard Shortcut, Apple Computer Keyboard Shortcuts.

1 comment:

Write Your Comments Here.