அட்டகாசப்படுத்தும் ஸ்கைப் ! புதிய வடிவமைப்பு , புதிய வசதிகள் ! - Tamil Tech

Jun 30, 2017

அட்டகாசப்படுத்தும் ஸ்கைப் ! புதிய வடிவமைப்பு , புதிய வசதிகள் !

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக ஸ்கைப் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்ள, முகம் பார்த்து பேச, வீடியோ பகிர்ந்துகொள்ள என பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டது ஸ்கைப்.

தற்பொழுது ஸ்கைப் இடைமுகத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். புதிய தோற்றத்தில் அட்டாகாசப்படுத்தி, பயனர்களை கவர்ந்துள்ளனர்.
skype introduces new features


ஸ்கைப் புதிய பதிப்பில் தான் இத்தையும் செய்திருக்கிறார்கள். IOS சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்கைப் பதிப்பில் Incall reaction என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழைப்பின் இடையே லைவ் டெக்ஸ்ட், லைவ் ஈமோஜிக்கள் என அனுப்பி உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தலாம்.

அதேபோன்று மெசேஜிங்கிலும் செய்துள்ளனர். மெசேஜ் அனுப்பு இடையில் Expressive Reactions பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிப்படுத்திடும் வசதியும் உண்டு.

இளைஞர்களை நிச்சயமாக இந்த அம்சங்கள் கவரும்.

புதிய ஐஓஎஸ் ஸ்கைப் பதிப்பினை ஆப்பிள் இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags: Apple ios, Skype for Apple Ios, New Skype Features, Skype New Interface.

No comments:

Post a Comment

Write Your Comments Here.