மீண்டும் அச்சுறுத்தும் வான்னகிரை வைரஸ் ! - Tamil Tech

Jun 27, 2017

மீண்டும் அச்சுறுத்தும் வான்னகிரை வைரஸ் !

உலகை அச்சுறுத்திய வான்னா கிரை வைரஸ் மீண்டும் ஐரோப்பிய நாடுகளை பாதித்துள்ளது.

கடந்த மாதங்களில் "ரேன்சம்வேர்" பாதிப்பால் பலர் பாதிப்படைந்த நிலையில் தற்பொழுது இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன், ரஷ்யா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் துணை பிரதமர் கம்ப்யூட்டரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பெற வேண்டுமானால் 300 அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

WANNA CRY VIRUS

இதற்கு முன்பு ரேன்சம்வேர் உலகில் இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை பாதித்தது. இது பணத்தை கேட்டும் மிரட்டும் வைரஸ். கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிட்டு, "பிட்காட்" என்ற சட்ட விரோத வழியில் பணத்தை கொடுக்க நிர்பந்த்தித்தது. பணம் செலுத்திய பிறகு முடக்கபட்ட கம்ப்யூட்டரை மீண்டும் செயல்படுத்துவதற்கான "கீ" யை வழங்கியது. பணம் தராவிட்டால், கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை அழித்துவிடவோ, பயன்படுத்த முடியாத குறியீடுகளாக மாற்றவோ செய்திடும்.

இதே போன்றே தற்பொழுது வான்னா கிரை வைரஸ் ஐரோப்பிய நாடுகளை பாதித்துள்ளது. உக்ரைன் விமான நிலையம், சென்ட்ரல் வங்கி, எண்ணைய் நிலையங்கள் போன்றவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை பாதித்து, 300 டாலர் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளது.

Tags: Computer Virus, Wanncry Virus, Ransomware, Ukrain, Europe, Computer Servers.

1 comment:

  1. வான்னா கிரை வைரஸ் பற்றிய சிறந்த பதிவு நன்றி நண்பா
    பிட்காயின் என்பது என்ன? ஏன் முக்கியம்?

    ReplyDelete

Write Your Comments Here.