logo blog

ஒன் ப்ளஸ் 5 தான் டாப் மச்சீ ! [Smartphone Specs]

இப்போ இருக்கிற ட்ரென்டிங்க ஒரு பாப்புலர் மாடல் 4, 5 மாசத்துக்கு கூட தாக்குப் பிடிக்காது. ஏன்னா அதே விலையில அதைவிட பெட்டரான மொபைல்போன்கள் ரீலீஸ் ஆகிறதுதான்.

oneplus 5 smartphone specs

ஒன் ப்ளஸ்

சீன தயாரிப்பான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் கிட்டதட்ட ஐபோன்களுக்கு சம்மானது. அதில இருக்கிற features அட்டகாசம். ஒன்ப்ளஸ் 3 போனுக்கு அடுத்து வெளிவர்ற போன் ஒன்ப்ளஸ் 5. ஏன் ஒன்ப்ளஸ் 4  என்னாச்சின்னு கேட்கிறவங்களுக்கு இந்த விஷயம் சுவராஷ்யமாதான் இருக்கும்.

எப்பவுமே 4 ங்கிறது அதிர்ஷ்டகார எண் இல்லைன்னு மக்கள் நம்பறதுதான். குறிப்பா சீன மக்கள் 4 ங்கிறதை மரண எண்னு சொல்றாங்க. இந்த விஷயத்துல ஒன்ப்ளஸ் மட்டும் இல்ல.. நோக்கியா, விவோ மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கும் அப்படிதான்.

கில்லி மாதிரி வரவிருக்கிற One Plus 5.

 Snapdragon 835 பிராச்சரோட சும்மா கில்லி மாதிரி வெளிவர இருக்கு ஒன்ப்ளஸ் 5 போன். இதுல 5.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, முன்பக்க ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டேஷ் சார்ஜ் டெக்னாலஜியுடன் கூடிய 3,600 mAh பேட்டரி, 6 ஜி.பி ரேம், 128 ஜி.பி இன்டர்னல் மெமரியும் உண்டு. கூடவே 3.5 mm ஆடியோ ஜாக்கும்.

கேமிரா

கேமிரான்னு பார்த்தா 16 மெகா பிக்சல் ஃபரண்ட் அண்ட் பேக் கேமிரா இருக்க வாய்ப்பிருக்கு. DXO கம்பெனிகூட டீல் வச்சிகிட்டதால் கேமரா ஆப்சன் தூக்கலாவே இருக்கும். அதுல சந்தேகமே இல்லை.

ஓஎஸ்


இப்போ புதுசா வந்திருக்கிற ஆன்ட்ராய்ட் நௌகாட் தான் கண்டிப்பா இருக்கும். கூடவே ஒன்ப்ளசோட ஆக்சிஜன் ஓஎஸ்சும்.

ஷேப் எப்படி இருக்கும்?

நான்கு மூலைகளிலும் சதுரமா இல்லாம வட்ட வடிவ கார்னர் இருக்கும். இது கீழே விழுந்தாலும் அதிக சேதம் ஆகாம இருக்கும். அப்புறம் பாக்கெட்ல வச்சிருக்கிறோது குத்தாம இருக்கும். அலுமினியம் மெட்டாலிக் பாடி. முந்தின ஒன்ப்ளஸ் 3t யைவிட கொஞ்சம் மெலிசா இருக்கும்.

கறுப்பு, தங்க நிறம், பச்சை நிறத்துல கிடைக்கும்.

விலை?

இதுக்கு முன்னாடி போனே 27999 ரூபாய்க்கு வித்தாங்க. இதுல நிறைய வசதிகள் இருக்கு. கண்டிப்பா 35 ஆயிரம் ரூபாயவது இருக்கலாம். அதைவிட கம்மியா கொடுத்தாலும் ஆச்சர்யபடறதுக்கு இல்ல.

எப்போ வரும்?

இந்த மாசம் ஜூன் க்குள்ள வெளிவிட்டுடுவாங்கன்னு எதிர்பார்த்து காத்துகிட்டிருக்கோம்.
Tags: one plus 5, one +3 smartphone, features, Rate, Camera, Smartphone specs.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.