அதிக பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன் [InFocus Smartphone with Big Battery] - Tamil Tech

Jun 27, 2017

அதிக பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன் [InFocus Smartphone with Big Battery]

ஸ்மார்ட்போனில் இருக்கக்கடிய பெரிய பிரச்னையே அதிக பேட்டரி பேக்கப் இல்லாத துதான். இதனால்தான் Power Bank என்ற இன்டஸ்டன்ட் சார்ஜிங் உபகரணம் வந்த து. எங்காவது வெளியூர் பயணங்கள் என்றால், கூடவே அதையும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை இருந்து வந்தது.

அதிக நேரம் பேட்டரி நிற்கும் ஸ்மார்ட்போன் வரவே வராது. நீண்ட நேரம் மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரி சார்ஜருடன் கூடிய ஸ்மார்ட்போன் எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது.
big battery smartphone

இன்ஃபோகஸ் நிறுவனம் வெளியிடப்போகும் அந்த புதிய ஸ்மார்ட்போன் தான் அது. அதில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்க கூடிய பெரிய பேட்டரி,
விரைவாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதி, 50 மணி நேரத்திற்கு தொடர்ந்து மியூசிக் கேட்கம் வசதி,  கைரேகை ஸ்கேனர், மெட்டல் பாடி என பல புதிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டால், கண்டிப்பாக சீன போன்களுக்கு அது பேரிடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: Smartphone specs, Specification, InFocus smartphone, Big Battery Smartphone.

No comments:

Post a Comment

Write Your Comments Here.