logo blog

துண்டிக்கப்பட்ட உறுப்புகள் மீண்டும் வளர செய்யும் மோக்ரிபை தொழில்நுட்பம் ! [Microbial Technology]

இயற்கையிலேயே சில உயிரினங்களுக்கு இழந்த பாகங்கள் வளர்ச்சி அடைந்துவிடும். உதாரணமாக பல்லியைச் சொல்லலாம். தனது வாலைத் தானே துண்டித்துவிடும். சில நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும். அந்த வகையில் தட்டை புழுக்கள், நட்சத்திர மீன்கள் போன்றவைகளும் இழந்த உடல் உறுப்புகள் மீண்டும் வளர்ந்துவிடும் இயற்கை அதிசயத்தைப் பெற்றுள்ளன.

microbial technology

ஆனால் மனிதனுக்கு?

விபத்து, நோய்வாய் படுதலின் மூலம் இழக்கும் உறுப்புகள் இழந்தவையே. மீண்டும் வளர்ச்சி அடையாது. அதற்கான செயற்கை உறுப்புகள் இருப்பினும், இயற்கையிலேயே இருப்பது போன்று வராது.

மோக்ரிபை தொழில்நுட்பம்

தற்பொழுது மனிதர்களுக்கு இழந்த உடல் உறுப்புகளை மீண்டும் வளர்ச்சி செய்ய புதிய நெறிமுறையை சர்வதேச ஆய்வு குழு கண்டுபிடித்துள்ளது. "மோக்ரிபை" எனும் கணினி குறி மாதிரியைப் பயன்படுத்தி மனித உடலின் அனைத்து வகை உயிரணுக்களையும் உற்பத்திச் செய்யக்கூடிய புளூரிபோடென்ட் எனப்படும் ஒரு வகை ஸ்டெம் செல்களை உற்பத்தி செய்ய முடியும் என சிங்கப்பூர் மருத்துவ சிங்கப்பூரில் உள்ள டியூக்நஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஓவென் ராக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த மோக்ரிபை தொழில்நுட்பம் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரணுக்களை செயல்படும் உயிரணுக்களாக  மாற்றம் செய்து பின்னர் அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும் என்கிறார்.

இது எப்படி சாத்தியமாகிறது?

மோக்ரிபை தொழில்நுட்பத்தின் மூலம்  சுமார் 300 வகையான மனித உயிரணு மற்றும் திசுக்களின் இயக்கத்துக்கு அடிப்படையான காரணிகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, கணினி மூலமாக ஒரு குறிப்பிட்ட உயிரணுவை மற்றொரு வகை உயிரணுவாக மாற்றத் தேவையான காரணிகளை இனம்கண்டு சொல்ல முடியும்.  இதனாலேயே இது சாத்தியப்படுகிறது. தற்போது தொடக்க நிலையில் இருக்கும் மோக்ரிபை தொழில்நுட்பம் வெகு விரைவில் மருத்துவமனைகளில் செயல்பட இருக்கிறது என்கிறார் ஓவென் ராக்கம்.

மோர்கிபை தொழில்நுட்பம் மட்டும் செயல்பாட்டு வந்துவிட்டால், மனிதர்களின் பலதரப்பட்ட நோய்கள் குணமாவதோடு, இழந்த உறுப்புகளையும் மீண்டும் பெற்றுவிடலாம்.

பல்லிக்கு இழந்த உறுப்பு எப்படி ReGenerate ஆகுதுன்னு பாருங்க (வீடியோ)

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.