கூகிளுக்கு 'குட்டு' வைத்த ஐரோப்பா ! - Tamil Tech

Jun 27, 2017

கூகிளுக்கு 'குட்டு' வைத்த ஐரோப்பா !

இணைய ஜாம்பவானாக இருக்கும் கூகிள்க்கு கூட சில நேரங்களில் அழுத்தமாக குட்டு வைக்கப்படுவதுண்டு. தனக்கு சாதகமான விற்பனை இணையதளங்களை கூகிள் சர்ச்சில் முதன்மை படுத்தியதாக கூகிளின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

google vs Europe union


இந்த வழக்கு ஏழாண்டுகள் நடைபெற்று வந்ததது. நேற்று தீர்ப்பு வழங்கிய ஐரோப்பிய யூனியன் கூகிள் நிறுவனத்திற்கு 17 ஆயிரத்து 425 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

மேலும், இந்த தவறை மூன்று மாதங்களுக்குள் திருத்தாவிட்டால், அதன் ஆண்டு மொத்த வருமானத்தில் 5 சதவிகிதம் அபராதமாக கட்ட நேரிடும் என எச்சரித்துள்ளது.

மிகப்பெரிய இணையதள ஜாம்பவனாக இருக்கும் கூகிள் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Google, Europe, Advertisement, Punishment, Tamil Tech News.

No comments:

Post a Comment

Write Your Comments Here.