logo blog

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரா? கண்கள் ஜாக்கிரதை !

கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக கண்கள் பாதிப்பு ஏற்படும். பாதிப்பு அதிகமாகும்பொழுது கண் பார்வை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். இது பயமுறுத்துவதற்காக இல்லை.  நடைமுறையில் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகி கொண்டிருப்பதால்தான் இதை ஒரு எச்சரிக்கையாக இங்கு பதிவு செய்கிறோம்.

computer vision syndrome

தொடர்ச்சியாக கணினி பயன்படுத்துவதால் என்ன ஆகும்?

கண்கள் வறட்சி அடையும். கண்களில் நீர் வழியும். தலைவலி ஏற்படும். கண் சோர்வு அடையும். பார்வை மங்கும்.

இதை ஆங்கிலத்தில் Computer Vision Syndrome என்கிறோம்.

இது யாருக்கெல்லாம் வரும்?

ஒருவர் தொடர்ந்து 4-5 ஆண்டுகளாக நாளொன்றில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் அதிகமாக  கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை உண்டாகும்.

அறிகுறிகள் என்ன?

கண் சிவத்தல், கண் வறட்சி, கண்ணீர் வடிதல். இது ஆரம்ப அறிகுறிகள். இதை கவனிக்காமல் விட்டால் பார்வை பறிபோகும் நிலைமை ஏற்படலாம்.

computer vision syndrome in tamil

இதற்கு சிகிச்சை உண்டா?

ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது. அதற்கான சிகிச்சை உண்டு. மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பிரச்னை சீராகும்.

சிகிச்சைகள்:

கண் திரை பாதிப்பிற்கு சொட்டு மருந்து விடும் சிகிச்சை, ஜெல் விடும் சிகிச்சை, பாதிப்பு அதிகமாகும்போது சிறு அறுவை சிகிச்சை போன்றவைகள் உண்டு.

கணினி  மற்றும் கணினி  அறை எப்படி அமைய வேண்டும்?

இந்த பிரச்னைகள் வாரமல் இருக்க / குறைக்க கணினி அறையில் போதிய காற்றோட்டம், வெளிச்சம் கட்டாயம் இருக்க வேண்டும்.
கணினித்திரை கண்களுக்கு நேராக இருக்கும்படி அமைக்க வேண்டும்.

இரவில் விளக்குகளை அனைத்துவிட்டு கணினி முன் உட்கார்ந்துவேலை செய்யக்கூடாது. செல்போன் பயன்படுத்தக்கூடாது.

தடுப்பு முறை:

எதிரொளிப்பு பாதிப்புகளை குறைக்க Anti Glare coated Glass களை அணிந்து கண்களை பாதுகாக்கலாம். Polarized Glasses அணிந்து பயன்படுத்தலாம்.

20-20-20 பார்முலா

இது ஒரு அற்புதமான பார்முலா.

  • கம்ப்யூட்டர் திரையிலிருந்து கண்களை எடுத்து 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடிகள் பார்த்தல்.
  • 20 நிமிடங்குக்கு ஒரு முறை 20 முறை கண்களை மூடி மூடி திறத்தல்.
  • 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்தல்
இதை பின்பற்றி கண்களை பாதுகாத்திடலாம்.  இதைச் செய்ய முடியாதவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்து, பிறகு பணிகளை தொடரலாம்.

Tags: Computer Tips, Computer Vision Syndrome, Polarized Glass, Anti Glare Coated Glass.

Share this

1 comment


சிறந்த வழிகாட்டல்

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.