வாட்சப்பில் அனைத்துவிதமான ஃபைல்களையும் பகிரும் வசதி அறிமுகம் ! - Tamil Tech

Jun 30, 2017

வாட்சப்பில் அனைத்துவிதமான ஃபைல்களையும் பகிரும் வசதி அறிமுகம் !

வாட்சப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதுவும் பேஸ்புக் - வாட்சப் இணைந்த பிறகு புதிய மாற்றங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் வாட்சப்பில் இனி எந்த ஒரு பார்மட்டில் இருக்கும் கோப்புகளையும் பகிரும் வசதி விரைவில் கொண்டுவர உள்ளது.

இதற்கு முன்பு வாட்சப்பில் வீடியோ, படங்கள், பிடிஎப் பைல், வோர்ட் டாகுமெண்ட் போன்ற குறிப்பிட்ட சில வகை கோப்புகள் மட்டுமே பகிர கூடிய வசதி இடம்பெற்றிருந்தது.

whatsapp file sharing options


இனி அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, எந்த ஒரு வகையான ஃபைலையும் ஷேர் செய்துகொள்ள முடியும்.

இதில் உள்ள ஒரு முக்கிய கட்டுப்பாடு, ஃபைல் அளவு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டும். ஐஓஎஸ் போன்கள் எனில் 128MB யும், ஆன்ட்ராய்ட் போன் எனில் 100MBக்கு உள்ளாகவும் கோப்புகள் இருக்க வேண்டும்.

Tags: Apple, Android, Whatsapp, File Sharing, Conditions, File Size, Tamil Tech News.

1 comment:

Write Your Comments Here.