பூமியில் இருந்து நிலவுக்கு எலிவேட்டர் | தமிழக மாணவர் சாதனை ! - Tamil Tech

Jun 30, 2017

பூமியில் இருந்து நிலவுக்கு எலிவேட்டர் | தமிழக மாணவர் சாதனை !

பூமியில் இருந்து நிலவுக்கு சர்வ சாதாரணமாக போய்வருவதற்கு சென்னைச் சேர்ந்த +2 மாணவன் எலிவேட்டர் வடிவமைத்துள்ளார். மிகச் சுலபமாக இதன் மூலம் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச்செல்ல முடியும்.

elevator from Earth to the moon


சான் உசே பல்கலைகழகம், நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியுடன் இணைந்து நடத்திய போட்டியில் +2 படித்த மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்த போட்டியில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவர் சாய்கிரண் இந்த எலிவேட்டரை வடிவமைத்துள்ளார்.

2013 ஆம் ஆண்டிலிருந்தே இந்த ப்ராஜக்டிற்கான ஆய்வினை மேற்கொண்ட சாய் கிரண், போட்டியில் வெற்றிப்பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.இந்த ப்ராஜக்டில் முக்கியமான விடயமாக மனிதர்கள் புவி ஈர்ப்பு விசையின்றி எப்படி அங்கு வாழ்வது என்பது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த எலிவேட்டர் லூனார் அடிப்படையில் அல்லது பூமியின் அடிப்படையில் வடிவமைக்கபடலாம் என்கிறார் சாய்.

Tags: Tamil Tech News, Elevator, Moon, Chennai, Saisaran, NASA.


No comments:

Post a Comment

Write Your Comments Here.