வாட்சப் வசதிகள் ! | whatsapp New Features - Tamil Tech

May 5, 2017

வாட்சப் வசதிகள் ! | whatsapp New Features

ஈசியாக தகவல்கள் பரிமாறிக்கொள்ள பயன்படும் சமூக தகவல் பறிமாறும் ஊடகம் வாட்சப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வாட்சப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. நண்பர்களுக்கு இடையே தகவல்களை பறிமாறிக்கொள்வதில் வாட்சப்தான் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலானோருக்கும் அதில் உள்ள கூடுதல் வசதிகள் பற்றித் தெரியாது. அது பற்றி தெரிந்துகொள்வோம்.

whatsapp puthiya vasathigal

கூடுதல் பாதுகாப்பு அவசியம்.

உங்களுடைய போன் தொலைந்துவிட்டாலோ, லாக் ஆகிவிட்டாலோ, உங்களுடைய வாட்சப் கணக்கை சிம் கார்டு மூலம் பயன்படுத்த முடியும்.

வாட்சப் பயன்படுத்துவதற்கு யூசர்நேம், பாஸ்வேர்ட் தேவையில்லை. OTP எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்ட் இருந்தால் போதும்.

எனவே இதனைத் தடுக்க Settings = > Accounts => Two Step Verification என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில் மெயில் ஐடி, பாஸ்வேர்ட்,  கொடுப்பதன் மூலம் உங்கள் சிம் கார்ட் வைத்து வேறு யாராவது வாட்சப் இன்ஸ்டால் செய்தாலும் யூசர்நேம், பாஸ்வேர்ட் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். இதன் மூலம் உங்கள் சிம்கார்டு, போன் மூலம் Whatsapp பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

இயர்போன் தேவையில்லை:

வாட்சப்பில் மெசேஜ் அனுப்புவதை போலவே, ஆடியோவை அனுப்ப முடியும். அந்த ஆடியோவை கேட்க, அதை பிளே செய்து காதருகே வைத்தால் போதும், ஸ்பீக்கர் மோடிலிருந்து இயர்போன் போன் மோடுக்கு தானாகவே மாறிவிடும்.

எழுத்துகள் வடிவம் மாற்றும் வசதி:

வாட்சப் டெக்ஸ்ட் மேசேஜ் தொடக்கத்தில் * கொடுத்து முடிவில் * உடன் முடித்தால் (இடைவெளி விடாமல்) அந்த டெக்ஸ்ட் போல்டாக மாறிவிடும்.

உம் *ஹாய் நலமா*

அதே போல இட்டாலிக் எழுத்து வடிவத்தை கொண்டுவர தொடக்கத்தில் _ குறியும், முடிவில்_ குறியும் கொடுக்க வேண்டும்.

உம். _உழவர் திருநாள் வாழ்த்துகள்_

வாட்சப் குரூப் வசதிகள்:

வாட்சப் குரூப்பில் அவ்வப்பொழுது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றில் முக்கியமானதை படிக்க புக்மார்க் செய்து கொண்டால் போதும்.

வாட்சப் குரூப்பில் உள்ள குறிப்பிட்ட நபருக்கு மட்டும் செய்தி அனுப்பு @ குறியுடன் அவர் பெயர் கொடுத்தால் போதும். அவருக்கு மட்டும் மெசேஜ் சென்றுவிடும்.

Tags: Whatsapp Message, Whatsapp Tips, Whatsapp New Features, Whatsaap tricks.

No comments:

Post a Comment

Write Your Comments Here.