டேட்டாவை மிச்சப்படுத்த உதவும் லைட் வர்சன் அப்ளிகேசன்கள் ! - Tamil Tech

May 18, 2017

டேட்டாவை மிச்சப்படுத்த உதவும் லைட் வர்சன் அப்ளிகேசன்கள் !

இப்போது பயன்படுத்தும் ஆப்ஸ்கள் அனைத்துமே இன்டர்நெட் டேட்டாவை விழுங்கி, நம் பணத்தை காலி செய்திடுபவைகளாகவே இருக்கின்றன.

விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு, குறைந்த அளவு ஆப்ஸ்களை மட்டும் பயன்படுத்துவது என்பது இயலாதது. அதற்கு தகுந்த மாதிரி ஆப்ஸ்களை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால் டேட்டா அதிகமாக செலவாகிறதே என்ன செய்ய?

lite version apps to reduce data


அந்த பிரச்னைக்கு உதவுபவைதான் லைட்வர்சன் ஆப்கள்.

இது என்ன செய்யும்?

இன்டர்நெட் டேட்டா அதிகம் செலவாகமல் பார்த்துக்கொள்ளும். பயன்படுத்துவதும் எளிது.

என்னென்ன லைட் ஆப்ஸ்கள் உள்ளன.

வழக்கமான பெரும்பாலும் பயன்படுத்தும் ட்விட்டர், பேஸ்புக், மெசென்ஜர், ஸ்கைப் போன்றவைகளுக்கு லைட் வர்சன் ஆப்ஸ்கள் உள்ளன.

இவைகள் வீடியோ முதலானவைகளை கம்ப்ரஸ் செய்து கொடுப்பதால், டேட்டா மிக குறைந்த அளவே செலவாகிறது.

ஃபேஸ்புக் லைட்:

உலகின் முதன்மையான சமூக இணையதளமான பேஸ்புக் தனது லைட் வர்சன் அப்ளிகேசனை வெளியிட்டுள்ளது. இதில் வீடியோ பார்க்க முடியாது. ஜிப் பைல்களை பார்க்க முடியாது. குறைந்த அளவுடன் கூடிய போட்டோக்களை மட்டும் பார்க்க முடியும். இதனால் பெருமளவு டேட்டா செலவாவது தடுக்கப்படுகிறது.

ட்விட்டர் லைட்:

பேஸ்புக்கிற்கு அடுத்து அதிகம் பேர் பயன்படுத்தும் அப்ளிகேசன் இது. இதுவும் தனது லைட் வர்சன் ட்விட்டர் ஆப்ஸ் வெளியிட்டுள்ளது. இதிலும் படங்கள், வீடியோக்கள் பார்க்க முடியாது. டெக்ஸ்ட் ட்வீட்களை மட்டும் பார்க்க முடியும். இதைப் பார்க்க mobile.twitter.com செல்ல வேண்டும்.

ஸ்கைப் லைட்:

மைக்ரோசாப்ட் - ன் ஸ்கைப் உலகின் பெரும்பாலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ காலிங் வசதி கொண்ட இந்த அப்ளிகேசனில் லைட் வர்சன் உண்டு. இது வீடியோ மற்றும் டேட்டாவை கம்ப்ரஸ் செய்து கொடுப்பதால் டேட்டா மிச்சமாகிறது.

மெசஞ்சர் லைட்:

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இது தெரியாமல் இருக்காது. லைட் வர்சனான இதில் மெயின் பேஸ்புக்கில் இருப்பதை போன்ற வசதிகளை பெற முடியும். இதில் ஆடியோ / வீடியோ கால் செய்ய முடியாது. அதே சமயம் சில ஸ்டிக்கர்களை இதில் இணைக்க முடியும். அதே போல இமேஜ் அட்டாச் செய்யவும் முடியும்.

தற்பொழுது ஜியோ, ஏர்டெல், ஏர்செல் போன்ற நெட்வொர்க்குகள் அதிக டேட்டாவை குறைந்த விலைக்கு கொடுத்தாலும், இன்டர்நெட் டேட்டா குறைவது என்பது சர்வ சதாரணமாகிவிட்டது. அதனால் மேற்குறிப்பிட்ட லைட் வர்சன் அப்ளிகேசன்கள் பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக நெட் டேட்டா வை மிச்சப்படுத்த முடியும். பணமும் மிச்சம்.

தொடர்புடைய தகவல்கள்:

பிஎஸ்என்எல் டேட்டா பிளான்ஸ்
டேட்டா அதிகம் செலவாகமல் பயன்படுத்துவது எப்படி?
ஏர்செல் இலவச இன்டர்நெட்

Tags: lite version app for android, android lite version app, twitter lite version, facebook lite version, skype lite, messenger lite.

No comments:

Post a Comment

Write Your Comments Here.