logo blog

இன்டர்நெட் டிப்ஸ் & ட்ரிக்ஸ் | Internet Tips and Tricks

இன்று இன்டர்நெட் வழியாகதான் பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள், வியாபாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இணையம் இல்லை என்றால் கண்டிப்பாக இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.

அந்தளவுக்கு மனித வாழ்வில் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது இணையம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இன்டர்நெட் பற்றிய டிப்ஸ் & ட்ரிக்ஸ் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
internet tips 2017

Tabbed Browsing: டேப்ட் பிரௌசிங்:

ஒரு அற்புதமான, பயன்மிக்க வசதி டேப் பிரௌசிங் (Tabbed) முறை . நீங்கள் ஏதாவது வெப்சைட்டில் ஒரு கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும்போது, அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் புதிய Tab-ல் ஓப்பன் ஆகும். இது Current பேஜில் நீங்கள் படிப்பதை எந்த விதத்திலும் பாதிக்காது.  சில நேரங்களில் அதே டேப்-ல் ஓப்பனாகும்படி லிங்க் அமைத்திருப்பார்கள். இதனால் முன்பு படித்துக்கொண்டிருந்த பக்கத்தை தொடர முடியாமல் போய்விடும். இதைத் தவிர்க்க சில வழிகள் உண்டு.

1. Ctrl கீயை அழுத்திக்கொண்டு லிங்க் மீது கிளிக் செய்தால் அது புது Tab-ல் ஓப்பன் ஆகும்.
2. Ctrl கீயை அழுத்தியவாறு மௌஸ் பட்டனை அழுத்தினால் புதிய டேப்ளில் லிங்க் ஓப்பனாகும்.

புதிய டேப் ஓப்பன் செய்ய ஷார்ட்கட் CTRL + T.

http:// போர்சன் தேவையில்லை:

நீங்கள் ஒரு வெப் பேஜின் அட்ரசை டைப் செய்ய, http:// முன்னொட்டை ஒவ்வொருமுறையும் டைப் செய்யத் தேவையில்லை. www. லிருந்து ஆரம்பித்தாலே போதும். www. கூட சில சமயம் படாது. உதாரணமாக Tech Tamilan வெப்சைட்டின் அட்ரசை techtamilan.net என டைப் செய்து என்டர் கொடுத்தாலே போதுமானது. வெப்சைட் ஓப்பனாகிவிடும்.

வெகு விரைவாக பார்ம் பில்லப் பண்ண

வெப் பேஜூல் உள்ள பார்ம் கட்டங்களை சீக்கிரமாக நிரப்ப இந்த முறையை பயன்படுத்தலாம். ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு மாற TaB விசையை அழுத்தினால் போதும். தொடர்ந்து ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு இப்படி மாற முடியும்.  முன்பு உள்ள கட்டத்திற்கு மாற Shift கீயை அழுத்திக்கொண்டு tab பட்டனை அழுத்தினால் கர்சர் முன்னர் உள்ள கட்டத்திற்கு சென்றுவிடும்.

(கீழுள்ள பார்மில் சோதித்துப் பாருங்கள். முதல் கட்டத்தில் பெயரை ஃபில் செய்துவிட்டு, Tab பட்டனை அழுத்திப் பாருங்கள். கர்சர் அடுத்த கட்டத்திற்கு நகரும். இப்பொழுது ஷிப்ட் கீ அழுத்தி பிடித்தப்படி Tab கீயை அழுத்திப் பாருங்க. முன்பு இருந்த கட்டத்திற்கு சென்றுவிடும். இப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு கர்சரை நகர்த்த டேப் கீ பயன்படுகிறது.)



இதே முறையை பட்டன்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு பட்டனிலிருந்து அடுத்த பட்டனுக்கு சென்றுவிடும். அப்பொழுது என்டர் அல்லது ஸ்பேஸ் பாரை தட்டினால் பட்டன் வேலை செய்யும்.

டிராப்டவுன் மெனுவில் பல வகையான கேட்டகிரி இருக்கும். நீண்ட டிராப்டவுன் மெனுவாக இருந்தால், தேவையானதை அதில் தேடிப்பெறுவது சிரம மாக இருக்கும். அந்த சிரமத்தை தவிர்க்க டிராப்-டவுன் மீது கிளிக் செய்து, தேர்ந்தெடுக்க வேண்டிய பெயரின் முதல் எழுத்தை அழுத்தினால் போதும். உடனே அந்த பெயர் டிராப்டவுன் மெனுவில் காட்டப்படும்.

உதாரணமாக உலக நாடுகளை டிராப்டவுன் மெனுவில் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். India என்பதை தேர்ந்தெடுக்க I என்ற எழுத்தி Press செய்தால் போதும். I வரிசையில் உள்ள நாடுகள் காட்டப்படும்.அதில் India என்பதை சுலபமாக தேர்ந்தெடுக்கலாம்.

கீழுள்ளதில் டெஸ்ட் செய்து பாருங்கள்:
What the List Looks Like:

பிரௌசர் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்:

  • அட்ரஸ் பாருக்கு கர்சர் கொண்டு செல்ல Alt+D அழுத்திப் பாருங்க. அல்லது Ctrl+L அழுத்துங்கள். அல்லது F6 அழுத்திப் பாருங்க. உடனே அட்ரஸ் பாருக்கு கர்சர் போய்விடும்.
  • ஃபான்ட் சைஸ் இன்கிரீஸ்/டிகிரீஸ் செய்ய Ctrl கீயை அழுத்திக்கொண்டு + குறியை அழுத்துங்கள். எழுத்துகள் பெரிதாகும். அதே போல எழுத்துக்களை சிறிதாக்க Ctrl கீயை அழுத்திக்கொண்டு - குறியை அழுத்துங்கள். எழுத்துகள் சிறியதாகும். நார்மலுக்கு கொண்டு Ctrl கீயை அழுத்திக்கொண்டு 0  ஜீரோ அழுத்துங்கள். இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
  • வெப் பேஜை ரெஃப்ரஸ் செய்ய F5 அல்லது Ctrl கீயை அழுத்தியவாறு R அழுத்துங்க. அந்த பக்கம் Refresh ஆகும்.
  • பார்க்கும் வெப்சைட் பக்கத்தை Full Screen ஆக்க F11.
  • புக்மார்க் செய்ய ஷார்ட் கட் Ctrl +D
  • படித்துக்கொண்டிருக்கும் வெப்சைட் பக்கத்தில் தேட Ctrl + F. 
தொடர்புடைய பதிவுகள்: 

Tags: Internet Tips, Internet Tricks, Tips and Tricks, Browser shortcuts, Tabbed Browsing, Tab Key, Buttons, Drop down box.

Share this

1 comment

Very useful Thank you

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.