வாட்சப் தமிழ் டைப்பிங் | How to Type Tamil in Whatsapp - Tamil Tech

May 17, 2017

வாட்சப் தமிழ் டைப்பிங் | How to Type Tamil in Whatsapp

வாட்சப்பில் தமிழ் டைப் செய்வது ரொம்ப சுலபம். நீங்கள் விரும்பிய மெசேஜ்களை மிக அழகாக, இயல்பாக தமிழில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம். அதற்கு உதவுகிறது கூகிள் இன்டிக்போர்ட்.

ஆண்ட்ராய்ட் போன், டேப்ளட், கம்ப்யூட்டர் என நீங்கள் இணையம் பயன்படுத்தும் எந்த ஒரு சாதனத்திலும் இதன் மூலம் தமிழ் டைப் செய்து அசத்தலாம்.

எப்படி வாட்சப் - ல் தமிழ் டைப் செய்வது?

ஆன்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் போன்களில் உள்ள பயன்பாடுகளை பயன்படுத்தி தமிழ் டைப் செய்வது ரொம்ப சுலபம்.

 • முதலில் கூகிள் இன்டிக் கீபோர்ட் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
 • இன்ஸ்டால் செய்த உடன் அந்த ஆப்பை திறக்கவும். 
 • இப்போது தோன்றும் திரையில் "Enable in Settings" என்பதை டாப் செய்யவும்.
 • தோன்றும் திரையில் "Google Indic Keyboard" என்பதை தேர்ந்தெடுக்கவும். 
 • பின்னர் "Select Input Method" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 • அடுத்து "English and Indian Language" என்ற விசைப்பலகையை தேர்ந்தெடுக்கவும். 
 • அடுத்து Accept கொடுக்கவும்.
 • அதற்கு அடுத்து தோன்றும் திரையில் "additional languages" என்பதை தட்டவும்.
 • பிறகு தமிழ் & ஆங்கிலம் என்ற உள்ளீட்டு பட்டனை தட்டவும்.
 • இப்போது வாட்சப்பை திறந்து மெசேஜ் பாக்சை தட்டவும்.
 • இப்போது கூகிள் இன்டிக் பாப்அப் தோன்றும். 
 • அதில் இந்திய மொழிகள் பட்டனை அழுத்தி, தோன்றும் திரையில் தமிழ் தேர்ந்தெடுக்கவும். 
 • இறுதியில் தமிழ் ஒலிப்பெயர்ப்பு அல்லது நேட்டிவ் கீபோர்ட் முறையை தேர்ந்தெடுத்து, தமிழ் டைப் செய்ய தொடங்கலாம். 

இது ஒரு எளிதான வழிமுறை. இனி தமிழ் டைப் செய்ய தெரியவில்லை என்ற எண்ணத்திற்கே இடமில்லை. அழகான தமிழில் உங்கள் எண்ணங்களை டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

வாட்சப் மட்டுமல்ல.. இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்திலும் தமிழ் டைப் செய்திட கூகிள் இன்டிக் முறை பயன்படும்.தொடர்புடைய தகவல்கள்:

ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்வது எப்படி?
சிறந்த தமிழ் டைப்பிங் சாப்ட்வேர்
போட்டோஷாப்பில் தமிழ் டைப் செய்வது எப்படி?

Tags: Whatsapp Tamil Type, Tamil Typing Method, Twitter tamil Type, Facebook Tamil Type Tool. Tamil Typing Software.

No comments:

Post a Comment

Write Your Comments Here.