கூகிள் சர்ச் ட்ரிக்ஸ் [Google Search Tricks] - Tamil Tech

May 4, 2017

கூகிள் சர்ச் ட்ரிக்ஸ் [Google Search Tricks]

கூகிள் பயன்படுத்தத் தெரிந்த பலரும் பயன்படுத்தாத ட்ரிக்ஸ் சில உள்ளன. சாதாரணமாக ஒரு வார்த்தையை அல்லது சில வார்த்தைகளை உள்ளிட்டுதான் கூகிள் சர்ச்சில் தேடுவார்கள். உதாரணமாக, techtamilan.net என கொடுத்து கூகிளில் தேடினால் "டெக்தமிழன்" இணையதளம் காட்டும். அதுபோல சில ட்ரிக் பயன்படுத்தி, தேவையான தகவல்களை நேரடியாக தேடிபெறலாம். அவற்றை பற்றித் தெரிந்துகொள்வோம்.

google search tricks in tamil

காலநிலை மற்றும் சினிமா கண்டுபிடிக்க

கூகிளில் உங்கள் ஏரியாவில் என்ன சீதோஷ்ண நிலை, என்னென்ன சினிமா படங்கள் ஓடுகிறது என்பதை தெரிந்துகொள்ள, ஏரியோ பெயர் அல்லது ஏரியா கோட் (pincode), ஜிப்கோட் கொடுத்து என்டர் தட்டினால், அதற்குரிய ரிசல்ட் கிடைக்கும்.

உதாரணமாக Movies Chennai அல்லது Movies 600008 என கொடுத்தால், இவ்வாறு இணைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
movies chennai

வார்த்தைக்கு விளக்கம் தெரிந்துகொள்ள

ஒரு வார்த்தைக்கு விளக்கம் தெரிந்துகொள்ள Define என்ற வார்த்தையை உள்ளிட்டு, விளக்கம் பெற வேண்டிய வார்த்தை டைப் செய்து என்டர் கொடுத்தால், அதற்கான விளக்கம் கிடைக்கும்.
உதாரணம்: define computer

லோக்கல் சர்ச்

அருகாமையில் உள்ள இடத்தை சர்ச் செய்ய இது பயன்படுகிறது. உதாரணமாக Local Search கிளிக் செய்து restaurant கொடுத்து தேடினால், அருகில் இருக்கும் ரெஸ்ட்ராண்ட் எது என காட்டும்.

போன் நம்பர் விபரம் தெரிந்துகொள்ள

ஏரியோ கோட் உடன் போன் நம்பரை உள்ளிட்டால், அந்த போன் எண்ணுக்குரிய அட்ரஸ் போன்ற விபரங்களை பெறலாம்.

ஏர்லைன் டிக்கெட்ஸ் & பேக்கேஜஸ் டிராக் செய்ய

ஏர்லைன் மற்றும் ப்ளைட் நம்பர் கொடுத்தால், அது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, air india.

டிரான்ஸ்லேட் வசதி

டெக்ஸ் அல்லது ஒரு புல் வெப்சைட்டை வேண்டிய மொழியில் டிரான்ஸ்லேட் செய்ய பயன்படுகிறது.

பி.டி.எப். பைல்களை மட்டும் தேட

குறிப்பிட்ட சப்ஜெக்டில் உள்ள PDF பைல்களை மட்டும் தேட உதவுகிறது. Computer File Type:PDF என கொடுத்தால் போதும். கம்ப்யூட்டர் பற்றிய பி.டி.எப். பைல்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கும்.

கால்குலேட்டர்

கூகிள் சர்ச் கால்குலேட்டராகவும் செயல்படுகிறது. கூகிள் சர்ச் பாக்சில் 1+10= என கொடுத்து என்டர் கொடுக்க, அதற்கான விடையை காட்டும்.

google calculator

தொடர்புடைய தகவல்:

கூகிள் டிராயிங் நீட்சி
கூகிள் தேடல் பெட்டி
கூகிள் தேடலில் ஆபாச தளங்களை தவிர்க்க

Tags:Google tricks, google search tricks, google tips, google search method, simple google search.

No comments:

Post a Comment

Write Your Comments Here.