logo blog

பேஸ்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து பார்மட் நீக்க - [Ms-Word Tips]

இணையதளம் அல்லது ஏதாவது ஒரு டெக்ஸ்ட் பைலிலிருந்து டெக்ஸ்ட்டை காப்பி செய்து MS-Word -ல் பேஸ்ட் செய்யும்பொழுது, கூடவே அதிலுள்ள பார்மட்டும் அப்படியே பேஸ்ட் ஆகிவிடும். குறிப்பாக இணையதளத்திலிருந்து எடுத்து காப்பி செய்யும்பொழுது Bold செய்யப்பட்ட எழுத்துகள், லிங்க்ஸ் (Links) போன்றவை அப்படியே பேஸ்ட் ஆகிவிடும். அந்த வார்த்தையை - லிங்கை பிளைன் டெக்ஸ்ட்டாக மாற்ற, அதை செலக்ட் செய்து (highlight), Ctrl + Spacebar அழுத்த அந்த பார்மட் மாறி,சாதாரண டெக்ஸ்ட் நமக்கு கிடைக்கும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க கிளிக் செய்யவும்.

remove formatting in msword

அந்த ஷார்ட்கட்டானது பார்மேட்டை ரிமூவ் செய்திடும். அதே சமயம் லிங்க் - இணைப்பையும் நீக்கிடும்.

அதேபோல் மைக்ரோசாப்ட் - வேர்ட்டில் உள்ள Paste Special அல்லது Keep Text Only ஆப்சனை உபயோகிப்பதன் மூலம், டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டை நீக்கி, சாதாரண பார்மட் நீக்கப்பெற்ற டெக்ஸ்ட்டை பெறமுடியும்.

குறிப்பு: தற்போதைய விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Ctrl + Windows Key + V ஷார்ட் பயன்படுத்தி, பிளைன் டெக்ஸ்டாக பேஸ்ட் செய்திட முடியும்.

மேலும் MS-Word தொடர்புடைய பதிவுகள்:
Tags: Remove Formatting in word, Word tips, MS-Word Formatting Tips, MS-Word tips in Tamil, Computer tips.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.