ஜியோ அதிரடி இன்டர்நெட் சலுகைகள் [JIO Data Offers] - Tamil Tech

Apr 10, 2017

ஜியோ அதிரடி இன்டர்நெட் சலுகைகள் [JIO Data Offers]

jio internet offer 2017

அடுத்தடுத்து இலவச திட்டங்களை அறிவித்து வந்த ரிலையன்ஸ் ஜியோ தற்பொழுது எல்லாவற்றையும் மிஞ்சிடும் அற்புதமான திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ ஜிகா பைபர் என்ற சேவைதான் அது. இந்த சேவையில் 600GB டேட்டா வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.

ஜியோ ஜிகா பைபர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நெட் ஸ்பீட் 1GBps என்ற அளவுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கூட 500 ரூபாய் செலுத்தி, நாளொன்றுக்கு 3.5GB டேட்டாவை பயன்படுத்த முடியும்.


  •  400 ரூபாய் செலுத்தினால் 24 மணி நேரத்திற்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகின்றது. 
  • ரூ.5500-க்கு 300 ஜிபி டேட்டா நொடிக்கு 600 எம்பி என்ற வேகத்தில், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது.
  • ரூ.4000 செலுத்தும் போது நொடிக்கு 400 எம்பி வேகத்தில் 500 ஜிபி இண்டர்நெட் சுமார் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது. 
  • ரூ.3,500 செலுத்தினால், நொடிக்கு 200 எம்பி வேகத்தில் 750 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றது. 
  • ரூ.2,000-த்திற்கு நொடிக்கு 100 எம்பி வேகத்தில் சுமார் 1000 ஜிபி இண்டர்நெட், 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.
  • ரூ.1,500 செலுத்தினால் நொடிக்கு 50 எம்பி என்ற வேகத்தில் 2000 ஜிபி டேட்டா சுமார் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க சுமார் 100 நகரங்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை வழங்கப்பட இருப்பதாகவும், இதனை ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிகிறது. ஜியோ ஃபைபர் ரௌவுட்டர் வாடிக்கையாளர்கள் ரூ.6000 செலுத்தியும் வாங்க முடியும்.

பிராட்பேன்ட் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்கள் நொடிக்கு 800 எம்பி என்றளவு வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெற முடியும். வெளியீட்டிற்குப் பின்னர் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இணையச் சேவை வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: JIO Internet Plans 2017, Jio New Offer March, JIO Reliance Network, JIO 5G, JIO 4G Plans 2017, JIO 4g internet Plans.

No comments:

Post a Comment

Write Your Comments Here.