ஜியோ ப்ரைம் மெம்பர் ஆஃபர் [Reliance Jio Offers] - Tamil Tech

Apr 1, 2017

ஜியோ ப்ரைம் மெம்பர் ஆஃபர் [Reliance Jio Offers]

சொன்னதையும் செய்வோம். சொல்லாததையும் சேர்த்து செய்வோம்ங்கிற சினிமா டயலாக் எதுக்கு பொருந்துதோ இல்லையோ, ஜியோ - வுக்கு நல்லாவே பொருந்துங்க.

முதல்ல 3 மாசம் மட்டுமே இலவச 4G கொடுப்போம்னு சொன்னவங்க, அதை மறுபடியும் மார்ச் 31 வரை நீட்டிச்சாங்க. சில கட்டுப்பாடுகளோட இருந்தாலும், இலவசமாக கிடைக்குதுதானேன்னு பலரும் அதை யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க.

jio offer in tamil


இதோ இப்ப கூட இன்னும் அதனோட ஆஃபர் அறிவிப்பு வந்திருக்கு. ஏப்ரல் 15ந்தேதி வரைக்கும் இலவச சேவை தொடருமாம்.

அதுக்குள்ள 99 ரூபாய் செலுத்தி ப்ரைம் மெம்பர் ஆகி, 303 ரூபாய் அல்லது அதுக்கு மேல ரீசார்ஜ் செய்திட்டால் அடுத்த 3 மாசத்துக்கும் இலவச சேவை தொடரும்னு சொல்லியிருக்காங்க. 3 மாசம் கழிஞ்ச பிறகுதான், நீங்க கட்டின காசுக்கு சேவைகள் தொடரும். அதாவது 90 நாள் கழிச்சுதான் பெய்ட் பீரியட் தொடங்கும்.

இது போதாதா.. இன்னும் 3 மாசத்துக்கு இலவச சேவை கொடுக்கிறேன்னு சொன்னதும் நிறைய பேர் கண்ணை மூடிகிட்டு பிரைம் மெம்பர் ஆகி, ரீசார்ஜ் பண்ணிகிட்டு இருக்காங்க.

நீங்க இன்னும் பிரைம் மெம்பர் ஆகலேன்னு உடனே ஆகிடுங்க. 303 ரூபாய் கட்டி ரீசார்ஜ் செய்திடுங்க. மொத்தம் 400 ரூபாய் செலவு செய்து செய்தால் அடுத்த 3 மாசத்துக்கு பிரச்னை இல்லாம ஓட்டலாம். இந்த 3 மாசத்துல ஏதாவது பிரச்னை டேட்டா ஸ்பீடு கம்மியா இருக்குங்கிற பட்சத்துல நீங்க ஜியோவை விட்டு வெளியேறலாம்னு சொல்லியிருக்காங்க.

எப்படிப் பார்த்தாலும் இலாபம்தான். அது மட்டுமில்லாம ப்ரைம் யூசருக்கு இந்த பிளான்களும் உண்டு.

Rs 19 plan: ஒரு நாள் வேலிடிட்டி | அன்லிமிட்டட் அழைப்புகள் | 20 எம்.பி 4ஜி டேட்டா

Rs 49 plan: 3 நாட்கள் வேலிடிட்டி |அன்லிமிட்டட் அழைப்புகள் | குறுஞ்செய்திகள் உடன் 600 எம்.பி 4ஜி டேட்டா

Rs  96 plan: 7 நாட்கள் வேலிடிட்டி | அன்லிமிட்டட் அழைப்புகள் | குறுஞ்செய்திகள் உடன் 7 ஜிபி 4ஜி டேட்டா. (ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். )

Rs 149 plan: 28 நாட்கள் வேலிடிட்டி| அன்லிமிட்டட் அழைப்புகள் | குறுஞ்செய்திகள் உடன் 2 ஜிபி 4ஜி டேட்டா

Rs 303 plan: 28 நாட்கள் வேலிடிட்டி | அன்லிமிட்டட் அழைப்புகள் | குறுஞ்செய்திகள் உடன் 28 ஜிபி 4ஜி டேட்டா. ( ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடு)

Rs 499 plan:  28 நாட்கள் வேலிடிட்டி | அன்லிமிட்டட் அழைப்புகள் | குறுஞ்செய்திகள் உடன் 56 ஜிபி 4ஜி டேட்டா. (ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடு)

இதெல்லாமே பயங்கர கவர்ச்சிகரமான திட்டங்கள். அனுபவித்தவர்களுக்குத்தான் அருமை தெரியும். சும்மாவே பணத்தை பிடிங்கின நெட்வொர்க் காரங்க இப்போ பயந்துபோய் கிடக்கறாங்க. 3 மாசத்துக்கு மறுபடியும் நீங்க இலவச சேவையை அனுபவிக்கணும்னா கண்டிப்பா ப்ரைம் மெம்பர் ஆகணும். அப்புறம் 303 ரூபாய்க்கு குறையாம ரீசார்ஜ் பண்ணிக்கணும். அடுத்த 90 நாளுக்கு மறுபடியும் இலவச சேவையை அனுபவிக்க தயாராகுங்க.

Tags: Jio Prime Offer, Jio Offer, Jio 4g Free Offer, Jio Reliance New Offer, Jio Plans Prime members, Prime member Offer Jio, Jio 4G Plans.

No comments:

Post a Comment

Write Your Comments Here.