ஸ்ட்ராங்க் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி? [Security Tips] - Tamil Tech

Apr 1, 2017

ஸ்ட்ராங்க் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி? [Security Tips]

யாரும் கண்டுபிடிக்க முடியாத படி ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் எப்படி அமைப்பது என்பதை நிச்சயம் ஒவ்வொரு இன்டர்நெட் யூசரும் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் மிக எளிதாக பாஸ்வேர்டை யூகித்து அறிந்துகொள்கிறார்கள். அல்லது பாஸ்வேர்ட் ஹேக் செய்துவிடுகிறார்கள். இவற்றைத் தடுக்க ஒரு அருமையான வழி உள்ளது.

create strong password

யாரும் யூகிக்க முடியாதபடி நம்பர், எழுத்துகள், சிம்பள் என அனைத்தையும் கலந்து கட்டி ஒரு பாஸ்வேர்ட் உருவாக்கினால் கண்டிப்பாக அதை அவ்வளவு எளிதில் யூகிக்க முடியாது. 

உதாரணமாக, 

tH@n9@^^p@1a^!

பாஸ்வேர்டை பார்த்ததுமே மண்டை குழம்பி போய்விடும். இதுதான் ஸ்ட்ராங் பாஸ்வேர்ட்

உங்களால் சொந்தமாக இப்படி பாஸ்வேர்ட் உருவாக்கி நினைவில் வைத்திருக்க முடியாது என்றால்,  கடினமான பாஸ்வேர்ட் உருவாக்குவதற்காக Password Generator மென்பொருள்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடினமான பாஸ்வேர்ட் உருவாக்கிட முடியும்.

IObit நிறுவனத்தார் உருவாக்கிய 1.85 MB அளவுள்ள ரேண்டம் பாஸ்வேர்ட் ஜெனரேட்டர் மென்பொருள்  அதற்கு துணை புரியும். இது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ஒரு செக்யூர் பாஸ்வேர்ட்டை அமைத்துக்கொடுக்கும்.

Random Password Manager பயன்படுத்தும் விதம்
  • இந்த மென்பொருளை டவுன் லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
  • இன்ஸ்டால் செய்த உடனே பாஸ்வேர்ட் பதியச் சொல்லிக்கேட்கும். 
  • உங்களுக்கு நினைவில் வரும்படியான ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கவும். 
  • (அப்பொழுது கொடுக்கும் பாஸ்வேர்டை மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் மென்பொருளை திறக்கும்பொழுது கட்டாயம் அந்த பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மென்பொருள் ஓப்பன் ஆகும்.) 
  • பிறகு அதில் உள்ள பாஸ்வேர்ட் ஜெனரேட்டர் டேப் பக்கத்தில் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும், எத்தனை கேரக்டரில் அமைய வேண்டும், ஸ்மால் லெட்டர் வேண்டுமா? கேப்பிடல் லட்டர்ஸ் வேண்டுமா, எண்கள் அதில் இருக்க வேண்டுமா? என்ற செக் பாக்சில் அனைத்திலும் டிக் செய்யப்பட்டிருக்கும். அவற்றில் ஏதேனும் தேவையில்லை என்றால் untick செய்து விடலாம்.  
  • பிறகு கீழுள்ள Create Password என்ற பட்டனை அழுத்தினால், உங்களுக்கு ஒரு அருமையான ஸ்ட்ராங்க் பாஸ்வேர்ட் ஜெனரேட் செய்யப்பட்டு கிடைக்கும். அதை காப்பி செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 
password generator


வசதிகள்:
உருவாக்கிய பாஸ்வேர்ட்கள் அனைத்தும் பாஸ்வேர்ட் மேனேஜரில் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கும். அதில்  ஒவ்வொரு பாஸ்வேர்டுக்கு ஒரு ஐடி கொடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த ஐடிக்குரிய பாஸ்வேர்ட் எதற்கு கொடுத்துள்ளீர்கள் என்பது நினைவுக்கு வரும். Id என்பது எண்ணாக இருக்கலாம். அல்லது சுருக்கமான சொற்களாக இருக்கலாம்.

உதாரணமாக பேஸ்புக்கிற்கு ஒரு பாஸ்வேர்ட் ஜெனரேட் செய்து, பயன்படுத்தினீர்களென்றால் அந்த பாஸ்வேர்டுக்கு FB என்ற சுருக்கமான ID கொடுத்துவிடலாம். இதனால் பாஸ்வேர்ட் எதற்குரியது என்பதை குழப்பமில்லாமல் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு முறை பயன்படுத்திய பாஸ்வேர்ட்டை மீண்டும் பயன்படுத்திட அதன் மீது ரைட் கிளிக் செய்து Copy Password என்பதை கிளிக் செய்தால் அந்த பாஸ்வேர்ட் காப்பி ஆகிவிடும். பிறகு எதில் (இணையதளத்தில் உ.ம்: Facebook, Twitter, Google Plus, etc )  பாஸ்வேர்ட் கொடுக்க விரும்பகிறீர்களோ, அந்த பாஸ்வேர்ட் பாக்சில் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

password manager record

முக்கியமான பண பரிவர்த்தனை செய்யும் இணையதளங்கள் போன்றவற்றின் பாஸ்வேர்ட்களை இதன் மூலம் ஜெனரேட் செய்து பயன்படுத்தலாம். தற்பொழுது one time password போன்ற வசதிகளை பண பரிமாற்றம் செய்வதற்கான வங்கிகளின் இணையதளங்கள் கொடுக்கின்றன. OTP என்ற அந்த பாஸ்வேர்ட் உங்களுடைய மொபைலுக்கு SMS ஆக அனுப்பி வைக்கப்படும். இந்த முறையில் இரட்டிப்பு பாதுகாப்புடன் அந்த இணையதளங்களைப் பயன்படுத்திட முடியும்.

ரேண்டம் பாஸ்வேர்ட் மேனேஜர் டவுன்லோட் செய்ய சுட்டி:


பதிவு குறித்த கருத்துகளை பகிர மறக்க வேண்டாம். பிடித்தால் முடிந்தளவு சமூக இணையதளங்களில் ஷேர் செய்யவும்.

Tags: Free download Password Generator, Password Generator Download, IObit Random Password Generator, Password generator software, Free Password Generator tool. 

No comments:

Post a Comment

Write Your Comments Here.