ஆட்டோமேட்டிக் ரிப்பீட் [YouTube Tips] - Tamil Tech

Apr 29, 2017

ஆட்டோமேட்டிக் ரிப்பீட் [YouTube Tips]

YouTube மில்லியன் கணக்கான வீடியோக்களை கொடுத்திருந்தாலும், அதில் பிடித்தமான வீடியோவை திரும்ப திரும்ப பிளே செய்வதற்கான Repeat ஆப்சன் இல்லை. இந்த வசதியை பல தேர்ட் பார்ட்டி வெப்சைட்டுகள் கொடுக்கின்றன. அவற்றில் சிறப்பான வசதியை கொடுக்கும் வெப்சைட் பற்றி தெரிந்துகொள்வோம்.

repeat youtube video automatically

YouTube Video Repeat - யுடீயூப் வீடியோ ரிப்பீட்

முதலில் உங்களுக்குத் தேவையான வீடியோவை ப்ளே செய்யுங்கள். முகவரி பட்டையில் (Address Bar) ல் சிறிய எடிட் வேலை செய்வதன் மூலம் வீடியோவை தொடர்ந்து ரீப்பீட் ஆகும்படி செய்துவிடலாம்.

Editing Tips: எடிட்டிங் டிப்ஸ்:

  • அட்ரஸ்பாரில் YouTube என்பதற்கு முன்பு உள்ளவற்றை டெலீட் செய்துவிடவும்.
  • பிறகு youtube வார்த்தைக்கு அடுத்து repeat என்ற வார்த்தையை சேர்த்து என்டர் தட்டவும். 
  • இப்பொழுது நீங்கள் விரும்பிய வீடியோ ப்ளே ஆகி முடிந்த பிறகு, மீண்டும் தானாகவே ரிப்பீட் ஆக  (Play) ஆரம்பிக்கும்.
  • உங்களுக்குப் பிடித்தமான பாடல்கள், மியூசிக் போன்றவற்றை தொடர்ந்து கேட்க இந்த முறை உதவிகரமாக இருக்கும்.

Explanation - விரிவு

https://www.youtube.com/watch?v=7qwdP2ksQeY இப்படி உள்ள URL ல் youtube என்பதற்கு முன்பு உள்ள https://www. என்பதை நீக்கிவிட்டு repeat என்ற வார்த்தைய சேர்க்க வேண்டும். அதன் பிறகு URL இப்படி இருக்கும்.

youtuberepeat.com/watch?v=7qwdP2ksQeY

இப்போது என்டர் தட்டுங்கள். பிறகு URL ஆனது இப்படி மாறிவிடும்.
http://listenonrepeat.com/watch/?v=7qwdP2ksQeY
இந்த பக்கத்தில் நீங்கள் விரும்பிய இந்த வீடியோவானது, நீங்கள் நிறுத்தும் வரை தொடர்ந்து ரிப்பீட் ஆகி கொண்டே இருக்கும்.

கூடுதல் தகவல்கள் :

யூடூப் வீடியோவை MP3 ஆக மாற்ற
விளம்பரம் இல்லாமல் YouTube Video பார்க்க
யுடியூப் சில பயனுள்ள தகவல்கள் 

Tags: YouTube Trick, YouTube Tips, YouTube video Repeat, automatically repeat YouTube videos.

No comments:

Post a Comment

Write Your Comments Here.