ஜியோ டண் டனா டண் ஆபர் [JIO Data Plans] - Tamil Tech

Apr 13, 2017

ஜியோ டண் டனா டண் ஆபர் [JIO Data Plans]

Jio dan dana dan offer

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆபரை வெளியிட்டதும், போட்டி நிறுவனங்களுக்கு வயிற்றை கலக்கியது. ஜீயோ தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதை தொடர்ந்து டிராயிடம் முறையிட்டன. இதனை அடுத்து டிராய் ஜியோவின் சம்மர் ஆஃபர் திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டது.

jio dan dana dan offer

டிராயின்  உத்தரவுபடி, சம்மர் சர்ப்ரைஸ் நிறுத்தப்படுவதாக ஜியோ அறிவித்தது. ஏன்கனவே இணைந்தவர்களுக்கு அந்த ஆஃபர் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தது. சம்மர் ஆபர் போலவே, தற்பொழுது "டண் டனா டண்" ஆபரை வெளியிட்டுள்ளது. இது தொடர்ந்து புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆபருக்கு முன்பு இணைந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் மூன்று மாதங்களுக்கு பதில் 4 மாதமாக நீடித்துள்ளது. அதாவது ஜியோ பிரைமில் இணைந்து ரூ.303 மற்றும் அதற்கு மேல் ரிசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது 3 மாத வேலிடிட்டியை தற்போது 4 மாதமாக மாற்றி ஜுலை வரை சேவையை நீடித்துள்ளது.

Tags: Jio Offer, jio dan dana dan offer, JIO Summer Offer.


No comments:

Post a Comment

Write Your Comments Here.