தமிழ் இமெயில் செயலி ! [Data Mail App] - Tamil Tech

Apr 4, 2017

தமிழ் இமெயில் செயலி ! [Data Mail App]

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது BSNL.  கம்ப்யூட்டர், ஆன்ட்ராய்ட் போன், ஐபோன் போன்ற எந்த ஒரு சாதனத்திலும்  'டேட்டா மெயில்' என்ற இந்த செயலியை பயன்படுத்திடலாம்.

இச் செயலின் வழியாக தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என மொத்தம் ஒன்பது மொழிகளில், 'E-Mail' முகவரியை உருவாக்க முடியும். இமெயில் உருவாக்க மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும். அந்த எண்ணை மட்டுமே  உள்ளிட்டு,  விரும்பிய மொழியில், விரும்பிய பெயருடன், இ -மெயில் முகவரியை உருவாக்கிடலாம்.

app to create email id in Tamil


 ரேடியோ சேனல் ஆரம்பிக்கும் வசதி இதில் உள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தி  உங்களுக்கு விருப்பமான பெயரில் ரேடியோ சேனல் தொடங்கலாம்.

அதன் மூலம் தங்களது குரலில் செய்தி உட்பட எத்தகைய கருத்துக்களையும் பேசி ஒலிபரப்பலாம். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

data mail app to create tamil email

தமிழில் இமெயில் உருவாக்க பயன்படும் Data Mail ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

சுட்டி: Download data mail app for free

Tags: data mail app, bsnl data mail app, data mail android app, tamil email creating android app.

1 comment:

  1. இதனைப் பயன்படுத்தி எல்லோரும் தமிழில் தகவல் பரிமாற்றம் செய்யலாமே!

    ReplyDelete

Write Your Comments Here.