வேலைக்கு உதவும் முகநூல் [Facebook helps to apply Job] - Tamil Tech

Feb 16, 2017

வேலைக்கு உதவும் முகநூல் [Facebook helps to apply Job]

முகநூல் நிறுவனம் தனது வலைத்தளத்தின் வழியாக உலகினையே ஒருங்கிணைக்கிறது. இன்றைய உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வை  கூட ஒரு நொடியில் அறிந்து கொள்கிறோம் என்றால், அதற்கு காரணம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள ஊடகங்கள்தான்.

jobs in facebook tamil


அத்தகைய முகநூல் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை தனது வலைத்தளத்தில் மேற்கொண்டு வருகிறது.அதுகுறித்த தகவல்கள் கீழே.

பேஸ்புக் இப்போதைய சூழலில் உலகின் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஓர் முன்னணி சமூக வலைத்தளமாகும்.உலகின் தொலைவில் உள்ளோரையும் எளிது தொடர்புக்கொள்ளக்கூடிய வகையிலும்,செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதர்க்கும் உதவுகிறது அதுமட்டுமின்றி நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது வழிவகுக்கிறது.

புதுப்பித்தல்:

இதனை உலகின் அதிகப்படியான பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்காக இது புதுபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது ஆகும்.சிறிது காலத்திற்கு முன் தான் இது வீடியோ கால் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்:

தனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிற முகநூல் நிறுவனம் அந்த வரிசையில் இப்போது தனது வலைத்தளத்தின் வழியே வேலைக்கும் விண்ணப்பிக்கிற வசதிகளையும் ஏற்படுத்தித் தரப்போகிறது.

ஏற்கனவே,வேலை தேடுவோரும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களும் தங்களுக்குள் ஓர் இணைப்புக்கருவியாக பேஸ்புக்கினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது அந்த வாய்ப்பினை முழுமைப்படுத்தி வழங்குகிறது முகநூல்.

அப்ளை செய்ய:

வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள் தங்களுக்கென்ற பக்கத்தில் தகவல்களை அளிப்பதன் மூலம் பயனாளர்கள் அப்ளை என்கிற ஆப்ஷன் வழியே விண்ணப்பிக்கலாம்.அளித்த தகவல்களில் ஏதேனும் பிழை இருந்தால் அத்தனையும் எடிட் செய்ய இயலும்.மேலும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் நியூஸ் பீட் பகுதியில் இடம்பெறும்.

லிங்க்டுஇன்:

லிங்க்டு இன் இணையதளம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை அளித்து நிறுவனங்களையும் வேலைதேடுவோரையும் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முகநூல் இந்த வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் லிங்க்டுஇன் இணையதளத்திற்கு சரியான போட்டியாகவும் தந்து பயனாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாகவும் இருக்ககூடும்.

Tags: Velai, Facebook Jobs, Facebook News, Tamil Tech News.


No comments:

Post a Comment

Write Your Comments Here.