logo blog

வோடபோன் 'சூப்பர் ஹவர்' பிளான்.! [Tamil Tech News]

vodafone offer tamil guide


மிக சமீபத்தில் தான் ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் ஈடுகொடுக்கும் வண்ணம் வோடபோன் அதன் போஸ்ட்பெயிட் ரெட் திட்டத்தின் கீழ் ரூ.499/- மற்றும் ரூ.699/- என்ற இரண்டு தொகுப்புகளை அறிமுகம் செய்தது.

ரூ.499/-க்கு 3ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு மற்றும் 100 இலவச உரை செய்திகளுடன் சேர்த்து எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகளையும் ரூ. 699/-க்கு அதே போன்ற அழைப்புகள் மற்றும் உரை செய்தி நன்மைகளுடன் 5ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவையும் வழங்குவதாக அறிவித்தது.


அதனை தொடர்ந்து இப்போது டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான வோடபோன் அதன் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 4ஜி டேட்டா வழங்கும் ரூ.16 என்ற ஒரு ஆரம்ப விலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.