கம்ப்யூட்டர்களுக்கான வாட்சப் மென்பொருள் [Whatsapp Software] - Tamil Tech

Dec 13, 2016

கம்ப்யூட்டர்களுக்கான வாட்சப் மென்பொருள் [Whatsapp Software]

வாட்ஸ்அப் சேவையை தற்பொழுது அனைத்து சாதனங்கள் மூலமும் பயன்படுத்த முடிந்தாலும் முன்னர் வெளிவந்த சில மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை இவ்வாண்டு இறுதியில் நிறுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

whatsapp for computer


அந்தவகையில் ஆரம்பத்தில் வெளிவந்த நோக்கியா, பிளாக்பெர்ரி உட்பட  ஆண்ட்ராய்டு விண்டோஸ் இயங்குதளங்களின்  முன்னைய பதிப்புக்களை  கொண்டு இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கான ஆதரவு இவாண்டின் இறுதியில் நிறுத்தப்படலாம்.

அதேநேரம் விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதற்கான மென்பொருள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

கீழுள்ள சுட்டி மூலம் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

உங்களின் சுயவிபர படத்தை மாற்றிக்கொள்வது உட்பட ஸ்மார்ட்போன் மூலம் பெறமுடியுமான அனைத்து வசதிகளையும் இந்த மென்பொருள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ்அப் மூலம் புதிய செய்திகள் பெறப்படும் போது அவற்றை நோட்டிபிகேஷன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.

இதனை தரவிறக்கி நிறுவிய பின்னர் தோன்றும் QR குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும் இனி உங்கள் வாட்ஸ்அப் கணக்கை கணினி மூலம் நிர்வகிக்கலாம்.

கம்ப்யூட்டருக்கான வாட்சப் செயலி டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்.

Tags: Whatsapp for Mac computer, Whatsapp for Windows computer, Whatsapp for Pc, Tamil Pc Whatsapp Software.

No comments:

Post a Comment

Write Your Comments Here.