மீண்டும் நோக்கியா போன்கள் [Nokia Phone News] - Tamil Tech

Dec 15, 2016

மீண்டும் நோக்கியா போன்கள் [Nokia Phone News]

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசி உலகில் அதிகளவு வரவேற்பை நோக்கியா கைப்பேசிகளே பெற்றிருந்தன.

இவற்றில் தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் வரை அறிமுகம் செய்யப்பட்டன.
nokia c1 smartphone

அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நோக்கிய நிறுவனத்தினை வாங்கி ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்திருந்தது.

சில காலத்தின் பின்னர் மைக்ரொசொப்ட் எனும் பெயருடனும் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இந் நிலையில் குறித்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் தனியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது நோக்கிய நிறுவனம்.

இதன்படி அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான முழுமையான அறிவித்தல் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தமது கையில் தவழ விட இப்போதே தயாராகிவருகின்றனர்.

தொடர்புடைய தகவல்

நோக்கியா லூமியா போனில் வீடியோ ரெக்கார்ட் செய்வது எப்படி?
பெஸ்ட் ஸ்மார்ட்போன்
ஆன்ட்ராய்ட் போனை புதியது போல மாற்ற

Tags: Nokia PHones, Nokia New smartphones, Nokia phones after 2015, Nokia New products.

No comments:

Post a Comment

Write Your Comments Here.