logo blog

ப்ளூடூத் புரட்சி [Bluetooth 5 Technology]

ப்ளூடூத் : டேட்டாக்களை (வீடியோ, போட்டோஸ் இன்னபிற) ஒரு சாதனத்திலிருந்து, மற்றொரு சாதனத்திற்கு கம்பி இணைப்பு இன்றி பறிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம்.  இந்த வயர்லெஸ் தரவு ஊடுகடத்தல் தொழில்நுட்பத்தில்  வியத்தகு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது Bluetooth 5. தற்போதுவரை மொபைல் சாதனங்கள் உட்பட, லேப்டொப் கணினிகளிலும் இந்த ப்ளூடூத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.



bluetooth 5 tamil features

பைல்களை பரிமாறக்கொள்ள பயன்படும் இந்த தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுதான் Bluetooth 5 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம்.

இது Bluetooth 4 இனை விடவும் இரண்டு மடங்கு வேகம் கூடியதாக இருக்கின்றது. மேலும் நான்கு மடங்கு தூரத்திற்கு தரவுகளைப் பரிமாற்றம் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

இந்த தகவலை Bluetooth Special Interest குழு  அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப் புதிய Bluetooth 5 தொழில்நுட்பமானது முந்தைய ப்ளூடூத் 4 ஐவிட சிறந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

நாள்தோறும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் சந்திக்கும் இவ்வேளையில் ப்ளூடூத் 5 கண்டிப்பாக ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: New Bluetooth Technology, Bluetooth 5, Bluetooth 4, Bluetooth updated technology, Bluetooth in Mobile, Bluetooth in Laptop.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.