logo blog

ஒரே செகண்டில் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி ! [Tamil Tech News]

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பேட்டரி சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும்.

அதேபோல பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவதற்கும் அதிக நேரம் பிடிக்கும்.

இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
batter charge within few seconds



அதாவது மின்கலங்களுக்கு பதிலாக சூப்பர்கொள்ளளவி (Super Capacitors) எனும் சாதனத்தை பயன்படுத்துவதாகும்.

இதுவரை உள்ள கொள்ளளவிகள் அதிக அளவில் மின் சக்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஆனாலும் அதிக வினைத்திறனுடன் மின்சக்திய வெளிவிடக்கூடியன.

எனினும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிகளவு மின் சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய சூப்பர் கொள்ளளவிகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஓரிரு செகண்ட்களில் சார்ஜ் செய்ய முடிவதுடன், ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக  பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இத் தகவலை Central Florida பல்கலைக்கழக ஆராய்ச்யாளரான Nitin Choudhary என்பவர் தெரிவித்துள்ளார்.

Tags: Cellphone, charge, Cellphone Charge Tricks, Tamil Tech News.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.