ஜியோ வாய்ஸ் காலிங் செய்வது எப்படி? [Jio voice Tips] - Tamil Tech

Dec 24, 2016

ஜியோ வாய்ஸ் காலிங் செய்வது எப்படி? [Jio voice Tips]

4g jio voice


ஜியோ4ஜிவாய்ஸ் (Jio4GVoice) ஆரம்பத்தில் ஜியோஜாயின் என்றே தொடங்கப்பட்டது. இதனை கொண்டு உங்களுடைய ஜியோ போனில் இருந்து 'தரமான' அழைப்புகளை மேற்கொள்ள முடியும் அல்லது ஒரு 4ஜி திறன் போன் இல்லாமலேயே ஜியோ பயன்படுத்த முடியும். இந்த ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்பை நீங்கள் பயன்படுத்த ஒரு ஜியோ இணைப்பு மிக அவசியமாகும்.

நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஒரு ஜியோ சிம் பொருத்தி இருக்க வேண்டும் அல்லது ஒரு ஜியோஃபை சாதனம் கொண்டு உங்கள் கருவி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்தனை பதிவிறக்கம் மற்றும் செட் அப் செய்வது எப்படி.?

  • பயன்பாட்டை மைஜியோ ஆப்பை பயன்படுத்தியோ அல்லது கூகுள் ப்ளேவில் இருந்தோ உங்கள் தொலைபேசியில் நிறுவவும் 
  • நீங்கள் ஒரு 3ஜி போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் பயன்பாட்டை உங்கள் ஜியோஃபை வைஃபை நெட்வொர்க் கொண்டு இணைக்க கேட்கப்படும். 
  • நீங்கள் ஒரு 4ஜி போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஜியோ 4ஜி நெட்வொர்க் உடன் இணைத்து பயன்படுத்த வேண்டும். 
  • ஆப் கனெக்ட் செய்யப்பட்ட உடன் உங்கள் ஜியோ இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும். 
  • பின்னர், கெட் ஸ்டார்ட்டட்என்பதை டாப் செய்யவும். 
  • அடுத்தாக, நீங்கள் ஜியோவை உங்கள் டீபால்ட் எஸ்எம்எஸ் ஆப் ஆக பயன்படுத்த விரும்புகிறீர்களா..? என்று கேட்கப்பட்டால் 'நோ' என்பதை தேர்வு செய்யவும். 
  • இப்போது ஜியோ4ஜிவாய்ஸ் செட்அப் அமைக்கப்பட்டுருக்கும். இனி நீங்கள் ஒருவரை அழைக்க அல்லது அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உங்கள் டயலர் தனை பயன்படுத்த முடியும். 


ஜியோ4ஜிவாய்ஸ் ஆப் கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது எப்படி.? 

  • தேவையான தொடர்பு எண்ணை டாப் செய்து போனை காதில் வைக்கவும். ஒருவேளை நீங்கள் ஒரு ஜியோ எண்ணிற்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்றால் அழைப்பை "ப்ரீபேர்" செய்ய முடியும். 
  • இப்போது இடது பக்கத்தில் உள்ள கேமிரா ஐகானை டாப் செய்ய உங்களால் புகைப்படங்கள் அனுப்ப முடியும். வலது பக்கத்தில் உள்ள லோக்கேஷன் ஐகானைடாப் செய்ய உங்கள் லோக்கேஷனை பகிர முடியும், துண்டு செய்தியுடன் அவசர அழைப்பு மேற்கொள்ள அர்ஜென்ட் கால் ஐகானை டாப் செய்யவும். 
  • ஒரு வீடியோ அழைப்பை நிகழ்த்த கீழ் இடது பக்கத்தினுள் உள்ள வீடியோ ஐகானை டாப் செய்யவும் 4) அல்லது நீங்கள் ஒரு குரல் அழைப்பை நிகழ்த்த கீழே வலது பக்கத்தில் உள்ள போன் ஐகானை டாப் செய்யவும்.
Tags: Jio, Jio voice calling, Jio Voice Call Settings, reliance jio voice call.

No comments:

Post a Comment

Write Your Comments Here.