100 கோடி யாகூ இ-மெயில் தகவல்கள் திருட்டு [Yahoo News] - Tamil Tech

Dec 21, 2016

100 கோடி யாகூ இ-மெயில் தகவல்கள் திருட்டு [Yahoo News]

கடந்த 2013-ல் 100 கோடி யாகூ இ-மெயில் பயனீட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக யாகூ நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-ம் ஆண்டில் யாகூ இ-மெயில்களில் மிகப்பெரிய ஊடுருவல் நடைபெற்று தகவல் கள் திருடப்பட்டன. இதில் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனீட் டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இணையதள தாக்குதலை நடத்தியது யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேபோல 2014-ம் ஆண்டிலும் யாகூ இ-மெயில்களில் இதே போன்ற ஊடுருவல் நடைபெற்றது. இதில் சுமார் 50 கோடி பயனீட் டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இரு ஊடுருவல் மூலம் யாகூ பயனீட்டாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, பாஸ்வேர்டுகள் திருடப் பட்டன. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாகூ நிறுவனத்தை வெர்சான் நிறுவனம் ரூ.32,361 கோடிக்கு கையகப்படுத்துகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் யாகூ நிறுவனம், வெர்சானின் அங்கமாக மாற உள்ளது.

Tags: Tamil Tech News, Yahoo Email Tips, Yahoo Email Hacks.

No comments:

Post a Comment

Write Your Comments Here.