கூகிள் வழங்கும் குறுந்தகவல் செயலி - Allo App - Tamil Tech

Nov 1, 2016

கூகிள் வழங்கும் குறுந்தகவல் செயலி - Allo App

கூகிள் வழங்கும் குறுந்தகவல் செயலி Allo App.  மொபைல் நம்பர் கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் அல்லோ வழங்குகின்றது.

google allo app tamil


Facebook-ஐப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு, மிக அதிக பயனுள்ள bot-ஐப் பயன்படுத்தி, குறுந்தகவல் App-ஐ வடிவமைத்துள்ளது.

Allo - மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல சுவாரஸ்யமான அம்சங்களுடன், க்ரூப் சேட்டிங், ஸ்டிக்கர்ஸ், செய்திகள் காலாவதியாகும் ஒரு ஆப்ஷனுடன் இந்த App தயாராகியுள்ளது. ஆனால், இதில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த அல்லோ ஆப்பை கூகிள் ‘smart messaging app' என்கிறது. ஏனெனில், நீங்கள் செய்தியனுப்புவதிலிருந்து, நீங்கள் அனுப்ப இருக்கும் வார்த்தைகளை அது கற்றுக்கொள்கிறது. மேலும், இதில் செய்திகளை மிகவும் ரகசியமானதாக்கலாம் மற்றும் உங்களுக்கு எப்பொழுது அது அழிக்கப்படவேண்டுமோ, அந்த நேரத்தை அழிக்கவும் செய்யலாம்.

snapchat -ஐப் போலவே, புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, அதன் மேல் நீங்கள் எதையாவது எழுதி அனுப்பமுடியும். மேலும், செய்திகளை அனுப்பும்போது கூகுள் செய்வதற்கான ஆப்ஷனும்,App-இன் அடிக்கோட்டில் அளிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Write Your Comments Here.