வீடியோவில் பிரிஸ்மா எபக்ட் உருவாக்க உதவும் செயலி ! - Tamil Tech

Aug 10, 2016

வீடியோவில் பிரிஸ்மா எபக்ட் உருவாக்க உதவும் செயலி !

போட்டோக்களை அழகான ஓவியத் தோற்றத்துக்கு மாற்றும் செயலி பிரிஸ்மா செயலி.  இது அறிமுகமான நாளிலிருந்தே பிரபலமாகிவிட்டது. இதைப்பற்றி அறியாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை. இதன் மூலம் படத்தை முக்கோண பிம்பமாக மாற்ற முடியும்.
prisma video making app

போட்டோவை பிரிஸ்மா படமாக மாற்றும் செயலியைத் தொடர்ந்து இப்பொழுது  வீடியோவுக்கும் பிரிஸ்மா தோற்றம் வழங்க கூடிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடிஸ்டோ எனும் புதிய செயலி இந்த வசதியை வழங்குகிறது.  இதன் மூலம் 10 செகண்ட் நீளமுள்ள வீடியோவை அழகான "பிரிஸ்மா வீடியோ" வாக மாற்ற  முடியும். கூகிள் ப்ளேஸ்டோரில் இருந்து இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிரிஸ்மா வீடியோ உருவாக்குவது எப்படி?


1. இந்த செயலியை டவுன்லோட் செய்து, ஓப்பன் செய்து கொண்ட பிறகு, உங்கள் போனில் உள்ள கேமரா செயல்பட ஆரம்பிக்கும்.
2. அதன் பின்னர், செயலியின் மத்தியில் உள்ள பட்டனை தொடுவதன் மூலம் 10செகண்ட் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடியும்.
3. அதன் பிறகு, உங்களுக்கு விருப்பமான Art Filter ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
4. நீங்கள் பதிவு செய்த வீடியோவானது, தேர்வு செய்த ஃபில்டருக்கு ஏற்ற வகையில் "பிரிஸ்மா" வடிவத்திற்கு மாறியிருக்கும்.

பிரிஸ்மா வீடியோ செயலியை டவுன்லோட் செய்ய சுட்டி: 

Download Prisma Video Making App for Android

Download Prisma Video Making App for iPhone

Tags: Pirsma video making, Tamil tech tips for Prima video, Prisma video making app.

No comments:

Post a Comment

Write Your Comments Here.