logo blog

உங்களுடைய முகத்தை வித்தியாசமான கெட்டப்களில் காட்டும் வெப்சைட் !

imagine yourself in new looks

உங்கள் முகத்தோற்றத்தை பல விதங்களில் பார்க்க ஆசையா? அப்படி என்றால் அதற்காகவே ஒரு சர்ச் என்ஜின் உண்டு. உங்களிடம் ஒரு போட்டோ , ஒரு இமெயில் ஐடி மட்டும் இருந்தால் போதும்.  உங்கள் முகத்தோற்றத்தை விரும்பியவாறு மாற்றி பார்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக நீளமான முடி வைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். 60 வயதில் உங்களுடைய முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்பன போன்ற சுவராஷ்யமான எதிர்பார்ப்புகளை நீங்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இமெயில் மூலம் dreambit.xyz வெப்சைடில் சைன் அப் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்துவிட்டு,   என்ன தோற்றத்தில் பார்க்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதை தட்டச்சிடலாம்.

உதாரணமாக Me with Curly Hair. அவ்வாறு உள்ளிடும்பொழுது உங்களுடைய முகமானது சுருள் முடியுடன் காட்சி அமைப்பு கொண்ட புகைப்படத்துடன் பொருத்தி காட்டும். இப்படி பல்வேறு விதமாக  உங்களுடைய முகத்தோற்றத்தை மாற்றிப் பார்த்து  மகிழலாம்.

உதாரணத்திற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.




Tags: Imagine Yourself, Change Your Face look, Making Different Face look Online.

Share this

1 comment

அருமையான தகவல்

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.