கூகுள் நடத்திய அறிவியல் போட்டியில் இந்திய மாணவர்கள் பங்கேற்பு - Tamil Tech

Aug 20, 2016

கூகுள் நடத்திய அறிவியல் போட்டியில் இந்திய மாணவர்கள் பங்கேற்பு

google ariviyal


ஆறாவது ஆண்டாக, இணையத்தின் மூலம் நடக்கும், 'கூகுள் அறிவியல் காட்சி'க்கான போட்டியில், இந்தியாவிலிருந்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் இறுதிச் சுற்றை எட்டியிருக்கின்றனர்.

உலகெங்கும் இருந்து, 13 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர், தங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்த உதவும் இப்போட்டிகளில், ஐதராபாத்தைச் சேர்ந்த, 15 வயது மாணவி பாத்திமாவும், பெங்களூருவைச் சேர்ந்த, 15 வயது மாணவன் ஷ்ரியங் ஆகியோர் தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப சாதனங்களுக்காக தேர்வாகியுள்ளனர்.

விவசாய பாசனத்திற்காக, சிறிய நீர் தேக்கங்களிலிருந்து தானியங்கி முறையில் தண்ணீரை திறந்து விடவும், கட்டுப்படுத்தவும் உதவும் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் பாத்திமா. தினமும் பயன்படுத்தும் பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுபவர்களுக்கு உதவும், 'கீப் டேப்' என்ற கருவியை ஷ்ரியங் உருவாக்கியிருக்கிறார்.

உடலில் அணியக்கூடிய இந்த கருவி, மேகக் கணினி அமைப்பை பயன்படுத்துகிறது. இறுதிச் சுற்றுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவ, மாணவியர் நால்வரும் தேர்வாகியுள்ளனர். இறுதிச் சுற்றில் மொத்தம், 16 பேர் போட்டியிடுவர்.

நன்றி: தினமலர்.

4 comments:

 1. வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே ...!!!

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு
  தொடருங்கள்
  தொடருவோம்

  ReplyDelete
 3. இறுதி சுற்றை முழுமையாக்கி வெற்றிபெற வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே

  ReplyDelete

Write Your Comments Here.