logo blog

வெப்சைட்டில் படங்களின் (Images) முக்கியத்தும் !

images very important for websites

ஒரு நிறுவனத்திற்கு இடம், பொருள், முதலீடு என எவ்வளவு தேவைகள் இருந்தாலும் அந்த நிறுவனத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நிறுவனத்தை பற்றிய சிறந்த படங்களே !

ஒரு நிறுவனத்திற்கு தேவையான இணையதளத்தை நாம் உருவாக்கும் போது அதுதொடர்பான படங்களை நாம் பதிவேற்றுவோம். அந்த படங்கள் ஏனோ தானோ என்று இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும் அவர்கள் நம்மிடம் வரும் விதமாகவும் இருப்பது அவசியமே ! சில நேரங்கள், கூகுள், யாஹு, பிங்க் போன்ற தேடுபொறிகளிடமிருந்து நாம் படங்களை எடுத்தாலும் அதற்குரிய காப்புரிமை என்பது நம்மிடம் இருக்காது. இதனால், பின்னாட்களில் அபராதம் கட்டக்கூடிய நிலைமையும் ஏற்படலாம்.

ஆனால், இதை நாம் தவிர்க்க முடியும். வணிக பயன்பாடு மற்றும் பிற தேவைகளுக்கான படங்களை இலவசமாகவும், இலவச ராயல்டி மற்றும் குறைந்த விலையிலும் பல தளங்களிலிருந்து பெறலாம். வணிக தேவைக்காக அத்தகைய தளங்களிலிருந்து எடுக்கப்படும் படங்களை பயன்படுத்துவதை அவர்கள் அனுமதிக்கின்றனர். இதேபோல் தரமான படங்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

1. GETTY IMAGES-ல் பல்வேறு வகையான படங்கள், இசைகள் மற்றும் வீடியோக்களை இலவசமாகவும் மற்றும் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தளத்தில் விளையாட்டு, பொழுதுபோக்கு, நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் பலவகையான பிரிவுகள் சார்ந்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் I STOCK, PHOTOS.COM மற்றும் THINK STOCK போன்ற தளங்கள் GETTY IMAGESன் பிற தளங்களாகும். இந்த தளங்களிலிருந்தும் படங்களை பெறமுடியும்.

2. SHUTTER STOCK தளத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த படங்கள், வீடியோ, இசை, ஓவியங்கள், VECTORS மற்றும் CARTOON கிடைக்கும். இவைகளை கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் (ROYALTY FREE) பெறலாம்.

3. FLICKR இணையத்தள நிறுவனம் YAHOO வின் துணை நிறுவனமாகும். இந்த தளத்தில் எண்ணற்ற புகைப்பட கலைஞர்கள் தாங்கள் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றிருப்பார்கள். வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக படங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான படங்கள் STARTUP STOCK PHOTOS தளத்திலிருந்து பெறமுடியும். இந்த தளத்திலிருந்து பெறப்பட்ட படங்களை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் தேவைக்கேற்பவும் மாற்றிகொள்ளலாம்.

5. STOCK SNAP தளத்தில் இயற்கை காட்சிகள் போன்ற பல படங்களை இலவசமாக பெற முடியும். இந்த தளத்தில் அதிகப்பட்ச தெளிவான படங்கள் வாரந்தோறும் சேர்க்கப்படுகின்றன.

6. BIG STOCK இணையத்தளத்தில் வணிகப் பயன்பாட்டிற்காக குறைந்த கட்டணத்தில் தரமான புகைப்படங்களை பெறலாம். இது SHUTTER STOCK - ன் துணை நிறுவனமாகும்.

7. POND 5 இணையத்தள நிறுவனத்தில் IMAGES, VIDEOS, 3D MODEL, SOUND FX, MUSIC, PHOTOSHOP PSD, ILLUSTRATION போன்றவைகள் கிடைக்கும். POND 5 யில் HD தரத்திலான படங்கள் மற்றும் வீடியோக்களை பெறலாம்.

8. 123RF இணையத்தள நிறுவனத்தில் எண்ணற்ற STOCK IMAGES, ICONS, INFOGRAPHIC, VECTORS, FOOTAGE AND AUDIO CLIPS இடம்பெற்றுள்ளன. இவற்றை இலவச உரிமையிலும் குறிப்பிட்ட கட்டணத்திலும் பெறலாம்.

9. DREAM STIME இணையத்தளத்தில் PHOTOS, ILLUSTRATIONS & CLIPART, 3D & COMPUTER GENERATED, HAND DRAWN & ARTISTIC, VECTOR, 2D & 3D ANIMATION STOCK FOOTAGE, WEB DESIGN, BANNERS, BUTTONS, WEB BACK GROUNDS போன்றவற்றை இலவச உரிமையுடனும், கட்டணம் செலுத்தியும் பெறலாம்.

10.YAY Images தளத்தில் ஆகியவற்றை PHOTOS, ILLUSTRATIONS இலவசமாகவும், குறிப்பிட்ட கட்டணத்திலும் பெறலாம். பல்வேறு வகையான படங்கள் கிடைக்கும்.

Share this

1 comment

அருமையான பதிவு

தொடருங்கள்

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.