logo blog

வெப்சைட் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

 How to earn Money through website - Tamil Guide

earn money tamil website
Image Credit: Google. 
இந்த தலைப்பை பார்த்து வந்த எனது வணக்கம். நண்பர்கள் பலரும் இதே கேள்வியை பலமுறை என்னிடம் இதற்கு கேட்டிருக்கின்றனர். அவர்கள் கேட்கும் ஆவலைப் பார்த்தால் உடனே அதிக பணம் சம்பாதித்து, சீக்கிரமே பணக்காரர் ஆகிட வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் வெப்சைட் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல.. அதே சம எளிதானதும் அல்ல.

அதற்கு சில பல முயற்சிகள் தேவை. குறிப்பாக தமிழ், ஆங்கிலம் நன்றாக, பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும். தினந்தோறும் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும்.

அல்லது முறையான கால இடைவெளிகளில் எழுத வேண்டும். உதாரணம், வாரம் இரு நாட்களை தேர்ந்தெடுத்து இரண்டு கட்டுரைகள் எழுதுவது.  அப்படி கட்டுரைகள் எழுத தெரிந்த நண்பர்கள் தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்கலாம்.

வெப்சைட் ஆரம்பிப்பதற்கு முன்பு, அது எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு வெப்சைட் ஆரம்பிக்க குறைந்த பட்சம் 3000 ரூபாய் தேவைப்படும்.

இலவசமாக கூட வெப்சைட் ஆரம்பிக்கலாம். ப்ளாகர், வேர்ட்ப்ரஸ் அந்த சேவைகளை வழங்குகிறது. ஆனால் முறையாக ஒரு வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் செலவு செய்துதான் ஆக வேண்டும். எதிர்காலத்தில் நிரந்தரமாக வாசகர்களை தக்க வைக்க, பிரச்னைகள் இன்றி வெப்சைட் இயங்க அது உதவும்.

எழுத தெரியும். வெப்சைட் ஆரம்பித்தாகிவிட்டது.

வெப்சைட் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

முதலில் உங்களுடைய வெப்சைட்டை பிரபலபடுத்த வேண்டும்.

அதற்கு முதலில் உங்களுடைய வெப்சைட்டில் அதிகமான கட்டுரைகள் எழுத வேண்டும். அது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். பொழுது போக்கும் அம்சங்களாக கூட இருக்கலாம். உதாரணம் சினிமா, வீடியோ போன்றவை. ஆனால் அது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் எடுத்துக்கொண்ட வெப்சைட் தலைப்புக்கு தொடர்பு அற்றதாக கட்டுரைகள் இருக்க கூடாது. இந்த இணையதளம் சென்றால் கட்டாயம் இந்த தகவல் நமக்கு கிடைக்கும் என வாசகர்களை நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும்.

வெப்சைட் பிரபலமாகிவிட்டது. வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இந்நிலையை எட்ட குறைந்த பட்சம் உங்களுக்கு ஆறுமாதங்கள் ஆகி இருக்கும். இனி என்ன செய்யலாம்?

இப்பொழுது உங்களுடைய வெப்சைட் பணம் சம்பாதிக்க தகுதியானதாக மாறியிருக்கும். எப்படி சம்பாதிப்பது?

வெப்சைட்டுகளில் விளம்பரங்கள் வைத்து சம்பாதிக்க முடியும். விளம்பரங்களை கொடுப்பதற்காகவே, பல ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக Google Adsense.

நீங்களவே உள்ளூர்  வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களை வாங்கியும் வைக்கலாம்.

எல்லாம் வல்ல இறைவன் அனுமதித்தால் இது பற்றி விரிவாக, தெளிவாக அடுத்து பதிவில் எழுதுகிறேன்.

Share this

1 comment

தகவலுக்கு நன்றி.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.