logo blog

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் இதய நோய் வரும் ஆபத்து !


computer ithaya noi

போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு சர்க்கரை, கல்லீரல் மற்றும் இதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு அதிகமான நேரம் உட்கார்ந்திருந்தால் இதயம் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக 720,425 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருப்போருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகளவில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 7 முதல் 8 மணிநேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே பணியாற்றுபவர்கள், வீட்டிலும் சாப்பிடுதல், டிவி பார்த்தல், கம்ப்யூட்டர் பார்த்தல் உள்ளிட்டவைகளுக்கும் அமர்ந்தே இருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

அதிக நேரம் நின்று கொண்டும், பொருட்களை எடுத்துக் கொண்டும் வேலை செய்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு மிக குறைப்பு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பணியிடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலுக்கு தேவையான பயிற்சி கொடுப்பதுடன் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதன் மூலம் இத்தகைய ஆபத்துக்களில் இருந்து காத்துக் கொள்ளலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Health tips, Computer Health, Tech News with Health tips.

நன்றி: தினமலர்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.