logo blog

மொபைல் கேம்ஸ் மூலம் வைரஸ் பரவும் அபாயங்கள் !

pokemon game

ஸ்மார்ட் போன் என்றாலே அதில் கேம்ஸ் இல்லாமல் இருக்காது. அதுவும் வித விதமான கேம்கள் புதிய புதிய வசதிகளுடன் வந்து அசத்திக் கொண்டிருக்கும் காலம் இது.

அந்த வகையில் பலரும் விரும்பி விளையாடும் ஒரு பாப்புலர்  கேம் Pokemon Go. இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இந்த கேம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பயனர்கள் இதன் பதிப்புக்களை பல்வேறு வழிகளில் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி டவுன்லோட் செய்யும் போக்மேன் கேம் பதிப்புகளானது தொலை தூரத்திலிருந்து தொலைபேசியின் தகவல்களை அடுத்தவர்கள் பெறும் வகையில் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த கேமானது  Hackers க்கு உங்கள் தொலைபேசியை கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்த தீங்கிழைக்கும் பதிப்புகள் New Zealand மற்றும் Australia வில் இதன் உண்மையான பதிப்புக்கள் வெளியிடப்பட்டு, வெறும் 72 மணி நேரத்துக்குள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த செயலி உத்தியோகபூர்வமாக வெளியிடப் படவில்லை.

ஆயினும் இதை விரும்புபவர்கள் மூன்றாவது நபர்களிடமிருந்து தரவிறக்கம் (Download from third Party) செய்து பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

நீங்கள் இச் செயலியை பயன்படுத்திக் கொண்டிருப்பவராயின் அது முறையானதா என அதன் அனுமதிகளை (Permissions)  ஒப்பிடுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

முறையற்ற அனுமதிகளைகொண்ட செயலியை பயன்படுத்தும்பொழுது, ஆன்ட்ராய்ட் போன்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியாது.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.