இந்தியா முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள உதவும் செயலிகள் ! - Tamil Tech

Jun 6, 2016

இந்தியா முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள உதவும் செயலிகள் !

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் தொலைதொடர்பு முற்றிலும் எளிமையாகி வருவதோடு இதற்கான கட்டணமும் குறைந்து கொண்டே வருகின்றது எனலாம்.
free calls

முன்பு அழைப்புகளை மேற்கொள்ள அதிக பணம் செலவிடும் காலம் கடந்து இன்று எல்லையில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ள பல வழிகள் இருக்கின்றன.

அந்த வகையில் இந்தியா முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

பிகோ

பிகோ செயலியை பதிவிறக்கம் - செய்தால் போதும், எல்லையில்லா உள்ளூர் மற்றும் சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்.

லிபான் இந்த செயலியை இன்ஸ்டால் செய்து, பின் லிபான்  செயலியை பயன்படுத்துவோருடன் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

நானு
யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள நானு - செயலி பயனுள்ளதாக இருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கெட்

அழைப்புகளை மேற்கொள்பவர் மட்டும் இண்டர்நெட் வைத்திருந்தால் இந்த செயலி  மூலம் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப்
இந்த செயலியை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வைபை இண்டர்நெட் இருந்தால் உலகம் முழுக்க தொடர்பு கொள்ள வழி செய்கின்றது வாட்ஸ்ஆப் செயலி.

வைபர்

உலகம் முழுக்க இலவசமாக தொடர்பு கொள்ள வழி செய்யும் வைபர்  செயலியில் எச்டி தரத்தில் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

ஸ்கைப்

ஸ்கைப் செயலியை பயன்படுத்தாதவர் இருக்கவே முடியாது எனலாம். உலகம் முழுக்க பிரபலமான இந்த செயலியின் மூலம் குறுந்தகவல், அழைப்பு, வீடியோ கால் என அனைத்தும் சாத்தியமே.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தங்கம்பழனி வலைத்தளம் -  முகநூல் பக்கம்.
No comments:

Post a Comment

Write Your Comments Here.