logo blog

வீடியோ எடிட்டிங் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்

Free Video Editing Software Corel videostudio Pro x5
வீடியோ மற்றும் ஆடியோ எடிட் செய்யப் பயன்படும் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருள் VideoStudio x5 Pro.  இந்த வகையான Video Editing Softwareமென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக/ கட்டணத்துடன் கிடைக்கிறது.

 இந்த மென்பொருளைப் பற்றியும், மென்பொருளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.


video and audio editing software

வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்?


வீடியோவை எடிட் செய்வதன் மூலம் நல்ல தரமான வீடியோவை உருவாக்க முடியும். கூடுதலாக எஃபக்ட்கை சேர்த்து வீடியோவை பார்ப்பதற்கு அழகாக மாற்ற முடியும். தேவையில்லாத காட்சிகளை நீக்கி, தேவையான காட்சிகளை சேர்க்க முடியும். மேலும் வீடியோவில் உள்ள ஆடியோவை சீரமைத்து சிறப்பாக ஒலியை வெளிக்கொணர முடியும். ஆக முழுமையான, ரசனை மிக்க வீடியோவை உருவாக்கி பெற முடியும். மேலும் ஒரு சில காரணங்கள்:

காரணம் ஒன்று: 

1. இன்று இணையத்தில் எண்ணற்ற வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. நமக்கு பிடித்தமானவைகளை நாம் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்துகிறோம்.

தரவிறக்கிய வீடியோ முழுவதும் நமக்குத் தேவையில்லாமல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டால், அது கணினியிலோ அல்லது  PenDrive, Memory Card போன்ற  Removal Device சாதனங்களிலோ அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.

வீடியோவின் அளவு குறைவாக இருப்பதால், இணையத்தில் தரவேற்றுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. குறைந்த அளவுடைய வீடியோக்களை  கிளிக் செய்த உடனே ப்ளே ஆகும்.

காரணம் இரண்டு: 

நம் வீட்டு விசேசங்களிலோ, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளிலோ, நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடங்களிலோ நாம் நம் Mobile கொண்டு Video எடுத்திருப்போம்.

அதில் தேவையில்லாத நபர்கள் குறுக்கே வந்திருப்பார்கள், தேவையில்லாத காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தேவையற்ற ஒலிகள், இரைச்சல்கள் கூட வீடியோவில் பதிவாகியிருக்கும்.

இவ்வாறு தேவையில்லாத பகுதிகளை வெட்டி எடுக்கவும், தேவையற்ற பேச்சு இரைச்சல்களை நீக்கி, விழாவிற்கேற்ற ரம்மியமான பாடல்களை பிண்ணனியில் ஒலிக்கச் செய்யவும் இந்த வீடியோ எடிட்டிங் செய்வது அவசியமாகிறது.

வீடியோ எடிட்டிங் எல்லோராலும் செய்ய முடியுமா?

முடியும். வீடியோ எடிட்டிங்கை தற்போது கணினி உபயோகிப்பவர்கள் அனைவராலும் செய்ய முடியும். தற்போது user friendly ஆகவே பல Video Editing Software-கள் இலவசமாக கிடைக்கிறது. அதில்  சிறப்பான ஒன்றுதான் Corel VideoStudio Pro x5 .

இது Trial version ஆகதான் கிடைக்கிறது. இந்த சோதனை மென்பொருளிலேயே அதிக வசதிகளை பெற முடியும்.

இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி :  Download Free VideoPro x10.

Corel VideoStudio Pro x10 ல் புதியதாக என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளது என்பதை விளக்கும் வீடியோ இது.



இனி என்ன?.. நீங்களும் ஒரு வீடியோ எடிட்டர் தான். மிகச் சுலபமான இம்மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களும் எளிதாக உங்கள் வீடியோக்களை எடிட் செய்து, பலரும் பார்க்கும் வண்ணம் அழகுற வடிவமைத்து வீடியோவை மெருகூட்டலாம்.

வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீங்க.. Screen Recording -ம் இதில் செய்யலாம்...

உங்கள் டெஸ்க்டாப் திரையை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் செய்யலாம். அதாவது நீங்கள் வீடியோ டுடோரியல் நடத்த இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

வீடியோவாக பதிவு செய்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம். Youtube போன்ற வீடியோ தளங்களில் Upload செய்து பலரும் பார்த்து பயனுறும் வகையில் செய்ய முடியும். நீங்கள் பதிவு செய்த வீடியோவை எடிட் செய்யலாம். தேவையான எஃபக்ட்களையும் கொடுக்கலாம்.. பின்னணி இசை, பின்னணி பாடல்கள் என அனைத்தையும் கொண்டு வரலாம்.


இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது என்பதை இந்த வீடியோவில் கண்டுகொள்ளுங்கள்.


மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்.. உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதுங்கள்..

இலவசமாக மென்பொருளைத் தரவிறக்க இணைப்பு சுட்டி: Download Free Corel VideoStudio Pro x5

Powerful video-editing software with screen recording

Corel VideoStudio Pro X10 is an all-in-one video editor that brings together creative editing, advanced effects, screen recording, interactive web video and total disc authoring. 

Ultra-fast and packed with intuitive tools, it lets you create everything from family movies and slideshows, to fun stop motion animations, and screen recordings of presentations, tutorials and more. 

Get creative with advanced compositing and stellar creative effects. Tap into the full power of your multi-core processor with unprecedented speed. 

And share everywhere with native HTML5 video support, and enhanced DVD and Blu-ray authoring.

Specilities: 
Fast & Easy HD video, Advanced Visual Effects, Complete Screen Recording, Innovative sharing.

Tags: Free video Editor, Free Screen Recording Software, Free Video Editing software, Corel VideoStudio Pro X10 

Share this

2 comments

அருமையான பகிர்வு

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

only its showing Trial Version, and its NOT free

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.