ஒரு ரூபாய்க்கு டெல் கம்ப்யூட்டர் | டெல் நிறுவனத்தின் புதிய திட்டம் - Tamil Tech

Apr 11, 2016

ஒரு ரூபாய்க்கு டெல் கம்ப்யூட்டர் | டெல் நிறுவனத்தின் புதிய திட்டம்

Dell back to school offer India

ஒரு ரூபாய்க்கு லேப்டாப் கிடைக்கும் என டெல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. பள்ளி மாணவர்களுக்காக இந்த சலுகையை "பேக் டூ ஸ்கூல்" என்ற திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கிறது.
dell computer for 1 rupee

வெறும் ஒரு ரூபாய் கொடுத்தால் லேப்டாப் வாங்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக தவணை முறையில் அந்த லேப்டாப்புக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பேக் டூ ஸ்கூல் திட்டத்தின் மூலம் டெல் நிறுவனத் தயாரிப்புகளான,
  • டெல் இன்ஸ்பிரான்
  • டெல் ஆல் இன் ஆல்
  • டெல் இன்ஸ்ஃபயர்
போன்ற கணினிகளை வாங்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகையின் கால அளவு மார்ச் 22ந்தேதி  முதல் மே 31ம் தேதி வரை மட்டுமே. 

இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

எங்கு வாங்கலாம் டெல் லேப்டாப்?

  • இந்தியாவில் உள்ள அதிகாரப் பூர்வ டெல் கம்ப்யூட்டர் விற்பனை நிலையங்கள்
  • கம்ப்யூஇன்டியா இணையதளம் (CompuIndia.com)
வாங்கப்படும் லேப்டாப்களை 7 நாட்களுக்கு "Back to School" திட்டத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு Dell Back To School Offer என்ற இணையதளத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

Write Your Comments Here.