logo blog

யுடியூப் வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்து எடுக்க உதவும் வெப்சைட்

Download your favorite YouTube videos as mp3 files without registration

convert mp3 from youtube videos
சில நேரங்களில் நமக்கு பிடித்த யூடியூப் வீடியோவிலிருந்து MP3 ஆடியோ மட்டும் தேவைப்படும். உதாரணமாக "தமிழ் பக்தி பாடல்கள்" கேட்க நினைப்போம். அப்பொழுது அது வீடியோவாக இருக்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கும். அதுபோன்ற நிலையில் யூடியூப் வீடியோவிலிருக்கும் ஆடியோவை மட்டும் பிரித்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் இல்லையா?


ஆடியோவாக இருப்பதில் சில வசதிகளும் உண்டு. ஏதேனும் வேலைகள் இருந்தால், அவற்றை செய்துகொண்டே ஆடியோவை கேட்க முடியும். வெளியில் நீண்ட தூரம் பயணம் செய்யும்பொழுது MP3 ஆக இருந்தால் அவற்றை கேட்டுக்கொண்டே செல்வது சுகம்.

அதற்கு சில வெப்சைட்கள் உதவுகின்றன. அதிலும் சில பிரச்னைகள் உண்டு. யூடியூபிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க பயன்படும் குறிப்பிட்ட சில வெப்சைட்களில் ஒரு அளவிற்குள் (உதாரணமாக 20 MB)  இருக்கிற ஆடியோவை மட்டுமே பிரித்தெடுக்க முடியும்.

பல பாடல்கள் ஒரே வீடியோவாக தொகுப்பட்ட வீடியோவிலிருந்து பாடல்களை ஒட்டுமொத்தமாக MP3 ஆக பிரிக்க வேண்டுமானால் அதுபோன்ற வெப்சைட்கள் உதவாது.

அதிகளவு உள்ள பாடல்களையும் (நான் 297MB அளவுள்ள MP3 தொகுப்பை இந்த வெப்சைட் மூலம் டவுன்லோன் செய்திருக்கிறேன். ) MP3 பைல்களாக மாற்றி டவுன்லோட் செய்யும் வசதியை கொடுக்கிறது vidtoMP3.com.

இந்த வெப்சைட் சென்று, எந்த யுடியூப் வீடியோவிலிருந்து, ஆடியோ பிரித்தெடுக்க வேண்டுமோ, அதன் யூ.ஆர்.எல். கொடுத்து convert கொடுத்தால், உங்களுக்கு தேவையான ஆடியோ மட்டும் பிரித்து, டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்கும்.

அதை கிளிக் செய்து, வேண்டிய MP3 ஐ மட்டும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

வெப்சைட் லிங்க்: VidtoMP3.Com

Share this

1 comment

அருமையான பதிவு
தொடருங்கள்

http://tebooks.friendhood.net/

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.