logo blog

போட்டோவுக்கு பார்டர் அமைப்பது எப்படி? (போட்டோஷாப் டுடோரியல்)

Last Update :11-03-2016 

போட்டோஷாப் மூலம் ஒரு படத்திற்கு பார்டர் அமைப்பது எப்படி ? அது ரொம்ப சுலபம்தாங்க. எப்படின்னு கேட்கறீங்களா? போட்டோஷாப் சாப்ட்வேர் மூலம் அழகான பார்டர் படங்களுக்கு கொடுக்கலாம். இந்த பதிவில் SIMPLE BORDER கொடுப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நான் போட்டோஷாப் CC வர்சன் உபயோகிக்கிறேன். எனவே அதில் எப்படி border அமைப்பது என்பதை கூறுகிறேன். Photoshop  -ல் பார்டர் அமைக்க சில வழிகள் உள்ளன. அனைத்துமே எளிதானதுதான்.

make-border-in-photoshop
போட்டோஷாப் - பார்டர் அமைப்பது எப்படி


1. முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள். (போட்டோஷாப்பில் படத்தை திறக்க Ctrl + O கொடுத்து கம்ப்யூ-ட்டரில் உள்ள படத்தை போட்டோஷாப்பில் ஓப்பன் செய்து கொள்ளலாம். )
2. Ctrl+Shift+N கொடுத்து புதிய லேயரை உருவாக்கி கொள்ளவும்.
3. புதிய லேயரை படத்திற்கு தேவையான பார்டர் உருவாக்க பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு முதலில் புதிய லேயரை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.
4. பார்டர் உருவாக்க மார்க்யூ டூலை பயன்படுத்த வேண்டும்.
இதற்கு ஷார்ட் கட் M.
5. Marquee டூலை எடுத்துக்கொண்டு, எந்தளவுக்கு பார்டர் வேண்டுமோ அந்தளவுக்கு புதிய லேயரின் மீது தேர்வு செய்யவும்.படத்தை பார்க்கவும்.
6. பிறகு Ctrl + I கொடுத்து அதை Invert செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்யும்பொழுது செலக்ட் செய்த பகுதி இப்படி மாறிவிடும்.
பிறகு என்ன கலரில் பார்டர் வேண்டுமோ அந்த நிறத்தை நிரப்ப வேண்டும். வண்ணம் நிரப்புவதற்கு 2 வழிகளை பயன்படுத்தலாம்.
7. 1. Brush Tool மூலம் வண்ணம் தீட்டுவது
.
2. Paint Bucket டூலை பயன்படுத்தி, புகைப் படத்தில் செலக்ட்செய்த பகுதியை வண்ணத்தில் நிரப்பிவிடலாம்.
paint bucket tool
பயன்படுத்துவது.  (நிறம் நிரப்புவதற்கு Bucket Tool பயன்படும். ஷார்ட் கட் கீ G. எளிதாக இருக்க ப்ரஸ் டூலை பயன்படுத்தி வண்ணத்தை இன்வர்ட் செய்த பகுதியில் தீட்டிவிடலாம். ப்ரஸ் டூலை தேர்வு செய்து கொண்டு , பார்டர் அமைய வேண்டிய வண்ணத்தை Swatches ல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

photoshop swatches
நிறத்தை செலக் செய்த பிறகு, Invert செய்து தேர்வாகி இருக்கும் பகுதியில் தேவையான நிறத்தை தீட்டிவிடலாம். இது மிக மிக எளிதானதாகும்.. அல்லது பெயின்ட் பக்கெட் டூல் மூலம் பெயிண்ட் நிறத்தை தேர்ந்தெடுத்து பார்டர் வேண்டிய பகுதியின் மீது கிளிக் செய்தால் அந்த நிறம்  தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் Fill ஆகி விடும். முழுவதும் BRUSH செய்த பிறகு உங்களுடைய படத்திற்கு அழகான "பார்டர்" கிடைத்திருக்கும். (படத்தைப் பார்க்க)
border in photoshp cc
Border in Photosohp cc

How to make border in Photoshop cc 2016

இப்பொழுது உங்கது படத்திற்கு தேவையான பார்டர் கிடைத்து இருக்கும். மேலும் வித்தியாசமான முறையில் போட்டோஷாப் மூலம் ஒரு படத்திற்கு பார்டர் அமைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.